பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஞானிகளும் மரணம் அடைகிறார்கள். அஞ்ஞானிகளும் மரணம் அடைகிறார்கள். இருவர் மறையும் செயல்களும் ஒன்றாவதில்லை. மரணம் வந்தால் அது நமக்கு விடுதலை ஆகாது. நேரே நாம் வீட்டுக்குப் போவதில்லை. விலங்கு மாறுவதில்லை. நமக்கு ஏற்படுவது சிறை மாற்றந்தான். நம்மை ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு அழைத்துப் போகப் போலீஸ்காரர்களைப் போல எமகிங்கரர்கள்தாம் வருகிறார்கள். ஆனால் ஞானிகள் அடையும் மரணமோ விடுதலை. அவர்கள் இன்ப துன்பங்களை அநுபவிக்க வேண்டிய காலம் முற்றுப் பெற்றமையினால், சிறை யில் இருக்கும்போதே நல்ல பிள்ளையாக இருந்து விட்டமை யால், அவர்களை நேரே வீட்டுக்குத் தேவர்கள் வந்து அழைத்துப் போகிறார்கள்; வீடாகிய மோட்சத்திற்கு விமானத்தில் ஏற்றி அழைத்துப் போகிறார்கள். யமகிங்கரரும் கணங்களும் ஒரு கதை சொல்வார்கள். யாரோ ஒருவன் உயிரோடு இருக்கும் போது மிக்க பாவங்களைச் செய்து வந்தான். இவற்றை எல்லாம் எமன் குறித்துக் கொண்டே வந்தான். ஒருநாள் அவன் மீனாட்சி யம்மையைத் தரிசனம் செய்திருக்கிறான். அதை எமன் குறித்துக் கொள்ளவில்லை. அவன் மரணம் அடைந்தான். அவனை அழைத்து வர அம்மை சிலரை அனுப்பினாள். இதற்குள் அங்கே எம கிங்கரர்கள் போலீஸ்காரர்களைப் போல அழைத்துப் போகக் காத்து நின்றார்கள். மீனாட்சியம்மையின் பணியாட்கள், நீங்கள் எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டதற்கு, "இவன் சொல்லொணாப் பாவங்களைச் செய்திருக்கிறான். ஆகவே நாங்கள் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்" என்று சொன்னார்களாம். அதற்கு, "அவன் எத்தனை ஆயிரம் பாவங்களைச் செய்திருந்தால்தான் என்ன? ஆயிரம் பொதி பஞ்சு மூட்டை அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன; என்றாலும் ஒரு சிறு தீப்பொறிபட்டால் அவையாவும் பொசுங்கி விடாதா? இவன் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் ஒரு முறை எங்கள் தேவியின் தரிசனம் பெற்றான். அது போதாதா அவன் பாவங்கள் எல்லாம் அழிந்து போக?' எனச் சொல்லித் தங்கள் விமானத்தில் ஏற்றிச் சென்றார்களாம். 144