பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு வது தவறு. அதனால் மரணத்தையே தவறு என்று சொன்னார். ஞானிகளுக்கு இந்த மரணமாகிய தவறு இராது. அது விடுதலை யாக, பரிபூரணமாக இருக்கும். இதுவே மரணமில்லாப் பெரு வாழ்வின் தொடக்கமாக இருக்கும். மரணப்ரமாதம் நமக்கு இல்லையாம். வாய்த்த துணை இறைவனை நம்பினவர்களுக்கு மரணம் வராது; விடுதலை தான் கிடைக்கும். அப்படிச் சொன்னவுடனேயே நமக்கு ஆசை உண்டாகிறது. மரணம் ஆகிய தவறு இல்லாத மங்கல வாழ்வு கிடைக்கிறது என்று சொன்னால் யாருக்குத்தான் ஆசை இராது? 'லட்ச ரூபாய் இனாம்' என்று கொட்டை எழுத்தில் விளம்பரம் செய்திருப்பதைப் பார்த்தவுடன், 'அடடா அது நமக்கு வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?' என்று எத்தனை பேர் பார்க்கிறார்கள் ஒரு ரூபாய் கூப்பன் வாங்கி எழுதி அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை போட்டால் பத்து ரூபாய்க்கு வாங்கி அனுப்புவார்கள் அல்லவா? யாரிடமாவது, 'லட்ச ரூபாய் இனாம் கிடைக்கும்' என்பதை முதலில் சொல்லாமல் ஒரு ரூபாய்க்குக் கூப்பன் வாங்கி அனுப்பச் சொன்னால் அனுப்பு வார்களா? இவ்வுலக விளம்பரத்தைப் போலவே அருணகிரியார் முதலில், 'மரணப்ரமாதம் நமக்கில்லையாம்' என்று ஆசை காட்டுகிறார். அடடா நமக்கும் அந்த மரணமில்லாப் பெரு வாழ்வு கிடைக்காதா?’ என்று ஆசைப்பட்ட மக்கள் அவரிடம் சென்று, 'சுவாமி, அப்படிச் சொல்ல உங்களுக்கு யார் துணை? எமனுக்குத் தெரிந்தவர்கள் யாராவது உங்களுக்கு நண்பரா? அதனால்தான் எமன் உங்களைக் கொல்ல மாட்டானா? அவ்வழியை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்' என்று கேட்டால், அவர் சொல்கிறார்: என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே 'எனக்கு இந்த உலகத்தில் வாழும் போதும், இந்த உலகை விட்டு மரணம் அடைகின்ற போதும், சென்று சேர வேண்டிய இடத்திலும் வேலும் மயிலும் துணை நிற்கின்றன. எல்லாக் 147