பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு கொடுத்தார்' என்று சொல்வதுபோல, ஆண்டவன் திருவருளால் இந்த வாழ்வு பெற்றமையை அவனிடமே சொல்கிறார். கிண்கிணி முகுள சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா பரண க்ருபாகர! ஞானாகர!சுர பாஸ்கரனே! போதணிந்த திருவடி இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றன. நல்ல அழகான அர்ச்சனை இது. முதலில் திருவடியிலிருந்து தொடங்குகிறது. எந்த இடத்தில் நமக்கு உஜ்ஜீவனம் கிடைத்ததோ அந்த இடத்தை மறுபடியும் நினைக்கிறார். எல்லாவிதமான துன்பத்தையும் போக்கும் இடமாக இருப்பது ஆண்டவன் திருவடி. இறைவன் அடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என வள்ளுவர் சொல்கிறார். துன்ப நீக்கத்திற்கு இருப்பிடமாக உள்ள ஆண்டவனது சரணாரவிந்தங் களை நினைந்து, அந்தப் பாதத்தை அழகாகப் பாடுகிறார். கிண்கிணி முகுள சரண! முகுளம் என்பது மொட்டு. அரும்பாக இருந்தால் பறிக்க மாட்டார்கள். அரும்பு முதிர்ந்தால் பேரரும்பு ஆகும். அதற்குப் போது என்று பெயர். இன்ன பொழுது என்று காட்டுவதனால் அந்தப் பெயர் வந்தது. அது கொஞ்சம் வாய் திறந்து இருக்கும். நடனமாடுபவர்கள் காலில் கெச்சை கட்டிச் கொள்கிறார்கள். அதன் வாய் சிறிது திறந்து இருக்கும். அந்தச் கெச்சைக்குக் கிண் கிணி என்று பெயர். இதைப் போலே அரும்பாகவும் இல்லாமல், முழுப் பூவாகவும் இல்லாமல் மலரும் பக்குவத்தில் இருக்கிற பேரரும்பானது சிறிது வாய் நெகிழ்ந்து இருக்கும். கிண்கிணியைப் போன்ற முகுளம் என்று அதைச் சொல்வார்கள். அன்பர்கள் ஆண்டவன் திருவடியில் நன்கு மலர்ந்த பூக்களைப் போடுவ தில்லை. அரும்புகளையும் போடுவதில்லை. வாய் சிறிது திறந் திருக்கிற பேரரும்புகளைப் பறித்துப் போடுவார்கள். ஆண்டவனது திருப்பாதம் கிண்கிணி முகுளங்களால் அர்ச்சனை செய்யப் பட்டிருக்கிறது. 'கிண்கிணி போன்றுள்ள பேரரும்புகள் கிடக்கும் திருவடியை உடையவனே! என்கிறார் அருணகிரியார். 149