பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு வணைந்துவணைந்து ஏத்துதும்யாம், வம்மின்உல கியலிர்! மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடிலாம் கண்டீர்; புனைந்துரையேன், பொய்புகலேன், சத்தியஞ்சொல்கின்றேன்; பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருணம் இதுவே" என்று இராமலிங்க சுவாமிகள் பாடுகிறார். இத்தகையவர்கள் மரணமாகிய தவறு இல்லை என்ற பெரு மிதத்தில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்தார்கள். அருணகிரி நாதரும் எம்பெருமான் முருகனுடைய, கிருபைக்கு ஆகரமாக இருப்பவனுடைய, ஞானாகரனுடைய, சுர பாஸ்கரனுடைய, கிண்கிணி முகுள சரணத்தைப் பற்றி, அவன் திருக்கரத்தில் உள்ள வேலும் மயிலும் உண்டே துணை என்று நம்பி வாழ்ந்த வகையினால், "மரணப்ரமாதம் நமக்கு இல்லையாம்' என்று சொல்லும் வீறு பெற்றார். மரணப்ர மாதம் நமக்கில்லை யாம்என்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலும்உண் டே! கிண் கிணிமுகுள சரண!ப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரட்சா பரண க்ரு பாகர! ஞானா கர! சுர பாஸ்கரனே! (மரணமாகிய தவறு நமக்கு இல்லையாகும்; எல்லாக் காலத்திலும் நமக்குக் கிடைத்துள்ள துணையாக ஒளிக் கதிர் வீசும் தோகையையுடைய மயிலும் வேலாயுதமும் இருக்கின்றன. கிங்கிணி வாய் போல உள்ள பேரரும்பு சூழ்ந்த திருவடியை உடையவனே! வீரத்தால் வரும் பிரதாபத்தை உடையவனே! இந்திராணியின் மங்கல நூலைப் பாதுகாக்கும் செயலைத் தாங்கியவனே! அருளுக்கு இருப்பிடமானவனே! ஞானத்தின் உறைவிடமே தேவர்களின் அறியாமை இருளைப் போக்கும் சூரியனே! ப்ரமாதம் - தவறு. கலாபி - கலாபத்தையுடைய மயில். முகுளம் - அரும்பு. சசிதேவி - இந்திராணி. தந்து - நூல். ரக்ஷா - பாதுகாப்பு. பரணண் - தரிக்கிறவன். ரrாபரணன் - பாதுகாப்பை மேற்கொண்டவன். சுரபாஸ்கரன் - தேவசூரியன்). j.55