பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கொப்புளிக்கச் செய்தது. அதைப் போலவேதான் முருகனும் முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கிறான். பழைய நினைவு தமிழில் வைத வசவு முருகனுக்கு இனிமையாக இருக்க மற்றொரு காரணமும் உண்டு. பொதுவாக ஒருவரோடு ஒருவர் பழகும்போது முதல் முதலாக நம் மனத்தில் பதிகின்ற எண்ணம் எதுவோ அது, எப்பொழுதும் உள்ளத்தே நின்று கொண்டிருக்கும். g)eogigigitair, "First impression is the best impression" arsitml ஆங்கிலத்தில் கூறுவர். முதல் முதலில் ஒரு நண்பனைச் சந்தித்துப் பழகுகிறோம். அப்போது அவன் சிறிய புத்தகம் ஒன்றைக் கொடுக்கிறான். அந்தப் புத்தகம் நமக்கு முதலில் வந்ததாதலின் அதனிடம் அபிமானம் அதிகம் இருக்கும். நல்ல மணமுள்ள மலர்களை அணிகின்ற குழலையுடைய வள்ளியை வேட்டு முருகன் தினைப்புனத்துக்கு ஓடினான். அப்போது அவனிடம் வள்ளி பேசினாளா? இல்லை. அவள் வாயிலிருந்து ஒரு சொல் வராதா என அவன் ஏங்கி எத்தனையோ காரியங்கள் செய்தான். அவளுக்குக் கோபத்தை மூட்டினான். வள்ளி மலை யிலே ஆலோலம் பாடிக் கிளியை ஒட்டிக் கொண்டிருந்த அவளிடம் அவன் மூட்டிய கோபம், "ஏடா, வேடா, மூடா, போடா என்ற வார்த்தைகளை அவள் வாயிலிருந்து உதிரச் செய்தது. அவள் பேசமாட்டாளா என ஏங்கிக் கிடந்த முருகனுக்கு அந்தச் சொற்கள் வசவாகவா தோன்றின? பேசாமல் இருந்த வள்ளி பேசிவிட்டாளே என்று மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தான். அந்த வசவை வாங்கிக் கொண்டு, 'நம்மையும் பார்த்து இவள் பேசினாளே!' என்ற நினைவில் மெய்ம்மறந்து நின்றான். யாரா வது முருகனை வைதால், இந்த மாதிரிதானே வள்ளி நம்மை வைதாள்?' என்ற கிளுகிளுப்பு அவனுக்கு உண்டாகிறது. வள்ளி யின் வாயிலிருந்து அவன் கேட்ட முதல் பேச்சு, தண்டமிழ் வசவு. அது அவனுக்கு இன்பத்தை அளித்தது. முத்தமிழால் வைதாலும், அது வசவு அல்லவா என்று நினைக்காமல், வள்ளி முதல் முதலாகப் பேசிய பேச்சுப் போன்றதல்லவா என்ற உணர்ச்சியில் கிளர்ச்சி உண்டாகி அருள் புரிகிறான். இதை நினைந்தே, 16C