பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஆறாக ஓடவில்லை. வாக்குச் சண்டை நடக்கிறது; கவி இன்ப ரசம் ஒடுகிறது. தேவசேனையின் கல்யாணம் திருப்பரங்குன்றத்தில் நடந்த தென்பது ஐதிஹ்யம். அங்கே தேவலோக வாசிகளும், பூலோக வாசிகளும் கூடி இருக்கிறார்கள். தேவசேனையின் கூட்டத்தார் ஒரு கட்சியாகவும், தமிழ்நாட்டுப் பெண் வள்ளிநாயகியைச் சார்ந்தவர்கள் ஒரு கட்சியாகவும் இருக்கிறார்கள். இரண்டு சாராரும் வாக்கு வாதம் செய்கிறார்கள். கல்யாணம் நடக்கும் போது பழைய காலத்தில் இப்படிச் சம்பந்திகள் வாக்குவாதம் செய்வதுண்டு. ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வார்கள். பாட்டிலே சிவபிரானுக்கும் திருமாலுக்கும் வாக்குவாதம். லட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் என்று சில உண்டு. அது போலத் திருப்பரங்குன்றத்தில் தேவசேனையின் கட்சிக்கும், வள்ளி நாயகியின் கட்சிக்கும் வாக்குவாதம். இந்தப் போர் இன்பப் போராக நடக்கிறது. தேவசேனையைச் சேர்ந்தவர்கள் நான்மறை முனிவர்; 'முருகன் தேவர்களுக்கு உரியவனாக இருக்கிறான்' என்று பேசுகிறார்கள். வள்ளியைச் சார்ந்தவர்கள், 'அதெல்லாம் உங்கள் கட்சி; முருகன் எங்கள் தமிழ்நாட்டுப் பெண் வள்ளியை, தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளபடி முதலில் களவுக்காதல் செய்து பின்னர்க் கல்யாணம் செய்து கொண்டான். தமிழ்நாட்டு இலக்கணத்திலே இதற்குத் தனி வரையறை உண்டு. வேதம் படித்த உங்களுக்கு அது தெரியாது' என்கிறார்கள். - "நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது காதற்காமம் - - - தள்ளப் பொருளியல்பில் தண்டமிழ்ஆய் வந்திலார் கொள்ளார்.இக் குன்று பயன்." 'தமிழை ஆராய்ச்சி பண்ணாதவர்களுக்கு இந்த அருமை தெரியாது. என்ன பைத்தியக்காரத்தனம் என்று நினைப்பார்கள் என்கிறார்கள். வாழ்க்கையில் இன்பம் தரக் கூடிய தூய காதலின் தன்மையைத் தமிழ் நூல் வரையறை செய்ததுபோல வேறு எதுவும் செய்யவில்லை. முருகப் பெருமான் வள்ளிநாயகியின் 164