பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் உண்டாகும். அவளுக்குக் கோபம் வந்தால் ஊடல் விளையும்; அதனால் மாமனாரைக் குறை சொன்னவர்மேல் மாப்பிள்ளைக்குக் கோபம் வருவது இயல்புதானே? மாமனாரைப் புகழ்ந்தால் மாப்பிள்ளைக்கு மகிழ்ச்சி உண்டாகும். முருகப் பெருமானுடைய அன்பைப் பெற வேண்டும் என்று அருணகிரிநாதர் விரும்புகிறார். அது மிக எளிதில் கிடைக்க வேண்டுமானால் வள்ளியைப் பிடித்தால்தான் நடக்கும். அவளுக்கு மகிழ்ச்சி உண்டானால், முருகனுக்கும் அவர்பால் அன்பு உண்டாகும். பொதுவாகப் பெண்களுக்கு அவர்களுடைய தகப்பனாரைப் புகழ்ந்து சொன்னால் மகிழ்ச்சி உண்டாகிவிடும். இதை உணர்ந்து கொண்டவர் அருணகிரிநாதர். ஆகவே தம் முடைய பாட்டிலே நேரே முருகனைப் பாடினாலும்கூட, அவன் திருமாலுக்கு மாப்பிள்ளையாக இருப்பதனால் பின் இரண்டடி யில் ராமசந்திர மூர்த்தியைப் புகழ்ந்து சொல்கிறார். வெய்ய வாரணம்போல் கைதான்.இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன். ராவண சங்காரம் ராமசந்திர மூர்த்தி ராவண சங்காரம் பண்ணினார். ராவணன் பத்துத் தலையும் இருபது கைகளும் உடைய அரக்கன். பலத்துக்கு யானையை உவமானம் சொல்வது வழக்கம். இங்கே வெய்ய வாரணத்தை ராவணனுக்கு உவமை கூறுகிறார். வெய்ய வாரணம் - மதம் பிடித்த யானை, மதம் பிடித்த யானை எவ்வளவு நாசத்தை விளைவிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? மதம் யானைக்குக் காமம் மிகும்போது வரும். ராவணன் காம மிகுதியினாலே அழிந்து போனான். யானை பலமுடையதாக இருப்பினும் காமம் மிகுந்தால் அழிவு வேலையைச் செய்கிறது; அதனால் அடிபடுகிறது. ராவணன் அளவில்லாத தவ வலிமை உடையவன். மிக மிகச் சிறந்த தவம் உடையவர்களாக இருப்பினும் காமம் மிகுந்துவிட்டால், அதனாலேயே அவர்கள் அழிந்து போவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு ராவணன். மதம் கொண்ட யானையைப் போலக் காம க.சொ.11-12 167