பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மிகுதியினாலே கண் தெரியாமல் இருந்தான் ராவணன். இருபது கைகளும் பத்துத் தலைகளும் இருந்த போதிலும் அவனுக்குக் காமம் மிகுந்த போது, அவை பயன்படாமல் போய்விட்டன. தசமுகம் கொண்ட ராவணன் உலகத்தை எல்லாம் அடக்கி ஆண்டான். பத்துத் திசைகளிலும் அவன் செல்வாக்கைச் செலுத்தி னான். பத்துத் தலை உடையவன் என்பது இந்த உண்மையைக் காட்டும் சின்னம். அது மட்டும் அல்ல. மனந்தான் ராவணன். கன்மேந்திரியங் கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து. இந்தப் பத்து இந்திரி யங்களின் உதவியைக் கொண்டு மனம் ஆட்சி புரிகிறது; நம்மை ஆட்டி வைக்கிறது; பல செயல்களைப் புரிகின்றது. மனம் ஆகிய ராவணன் பத்து இந்திரியங்கள் ஆகிய பத்துத் தலைகளை உடைய வனாக இருக்கிறான். எல்லோருடைய மனங்களும் பத்துத் தலை ராவனர்களே. பத்துத் தலை ராவணனின் ஆட்டம் குலைய வேண்டு மானால் ராமசந்திர மூர்த்தியைத் தியானம் பண்ண வேண்டும், 'ராமன் ராவணனுடைய பத்துத் தலையையும் கத்தரித்துத் துண்டாகி விழும்படி அம்பை எய்தான். அவனுடைய மருமகன் முருகன்' என்று அருணகிரிநாத சுவாமி ராமசந்திர மூர்த்தியின் பிரதாபத்தைச் சொல்லி, முருகனை நமக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறார். வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன். - ராவணனை எடுத்த எடுப்பில், "வெய்ய வாரணம் போல்' என்றார். யானைக்குப் பிரதானமானது எது? கை துதிக்கை. ஆகவே யானை என்றவுடன் கை நினைவுக்கு வருகிறது. 'வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான்' என்றார். மதம் பிடித்த யானை தன் துதிக்கையினால் எல்லாவற்றையும் பற்றி இழுத்து நாசம் செய்யும். மற்றவர்கள் சுகத்திற்கு எவை பொருளாக இருக்கின்றனவோ, அவற்றை வாரி எடுக்கிற கைகள் ராவணனுடைய இருபது கைகள். சீதையை அந்தக் கைகள்தாமே எடுத்துச் சென்றன? மதங்கொண்ட யானையை உவமை கூறுவது எவ்வளவு பொருத்தம்! 168