பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் உமை குமரன் மாமாவைச் சொன்னவர் அந்த உறவுக்குக் காரணமான அம்மா வையும் சொல்கிறார். மாமன் உறவு அம்மாவின் மூலமாகத் தானே வருகிறது? உமையாள் பயந்த இலஞ்சியமே உமையாள் பெற்ற குழந்தை முருகன். இலஞ்சியம் என்ற சொல் மிகவும் அருமையானது. இப்பொழுது கடலூர்ப் பக்கத்தில் குழந்தையை இலஞ்சியம் என்று அருமை பாராட்டிச் சொல் கிறார்கள். 'வள்ளியை மணந்து கொண்டவன் முருகன்; அதனால் தமிழில் ஆர்வம் உடையவன்; முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கிறவன். ராவணசங்காரம் செய்த ராமசந்திர மூர்த்தியின் மருமகன். உமையவளின் அருமைக் குழந்தை' என்று முருக னுடைய புகழை அலங்காரமாகச் சொல்கிறார். அருணை முனிவர். மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதா ரையும் அங்கு வாழவைப் போன்,வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே. (வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையை அணிந்த கூந்தலை யுடைய வள்ளி நாயகியை விரும்பி மணந்து கொண்ட முருகன், மூன்று தமிழினால் வைதவர்களையும் அப்பொழுதே வாழ வைப்பவன்; மதங்கொண்ட யானையைப் போலக் கைகள் இருபது உடைய ராவணனுடைய தலைகள் பத்தும் அற்று விழச் செய்யும்படி அம்பை எய்த இராமபிரானுடைய மருமகன்; உமாதேவி பெற்ற அருமைக் குழந்தை. வள்ளியை வேட்டவன்: எழுவாய். வாழவைப்போன், மருகன், இலஞ்சியம் என்ற மூன்றும் பெயர்ப் பயனிலைகள். மொய் - வண்டு மொய்க்கும். தார் என்பது பெரும்பாலும் ஆடவர் மார்பில் அணியும் மாலையைக் குறிப்பது; ஆயினும் இங்கே கூந்தலில் சூடும் மாலைக்கு வந்தது. வேட்டல் - விரும்புதல், மணம் செய்: 169