பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கொள்ளுதல்; இங்கே விரும்பி மணம் செய்து கொள்ளுதல் என்று பொருள் கொள்வது சிறப்பு. முத்தமிழ் - இயல், இசை நாடகம் என்ற மூன்று பிரிவாக உள்ள தமிழ். வைதாரையும்: உம்மை - உயர்வு சிறப்பு. வாழ்த்தினாரை வாழவைப்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அங்கு என்றது அப்பொழுதே என்ற பொருளில் வந்தது. வெய்ய வாரணம்: வெம்மை காம மிகுதியால் உண்டான மதத்தைக் குறிப்பித்தது. வாரணம் - யானை. வெய்ய வாரணம் கையினாலும், காமத்தினாலும் ராவணனுக்கு உவமையாயிற்று. தான் கை இருபதுடையான் என்று, தான் என்பதை இராவணனுக்குக் கொள்க. கத்தரிக்க - துண்டு படுத்த, எய்தான் - அம்பை எய்தவன். பயந்த - பெற்ற, இலஞ்சியம் - அருமைக் குழந்தை.) 17O