பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வர்கள் என்ற உண்மையை எண்ணி அவர்களிடம் மரியாதை வைக்க வேண்டும்' என்று சொல்வார்கள். "நான் மற்றப் பொருள்களை உணர்கிற மாதிரி கடவுளுடைய இருப்பை உணர்கிறேன். உள்ளொலியை நான் கேட்கிறேன்' என்று காந்தியடிகள் சொன்னார். அவர் சாதகம் எதுவும் பண்ண வில்லை. யோகம் பண்ணவில்லை. தம் வாழ்க்கை முழுவதும் சத்திய சோதனை செய்தார். அவர் இறைவனை உணர்ந்தார் என்றால் ஆண்டவனது பேரருளிலேயே கலந்து வாழ்ந்தவர்களான அருணகிரிநாதர், ஞானசம்பந்தப் பெருமான் முதலியவர்கள் கடவுளின் இன்ப அநுபவத்தை இகவாழ்விலே பெற்றார்கள் என்பதில் ஐயம் என்ன? வேண்டுகோள் அருணகிரி நாதரும் தம் அநுபவ நிலையில் இன்ப நிறைவு பெற்றார். அதனைப் பெறுவதற்கு முன்னாலே வேண்டிக் கொண்ட வேண்டுகோள் இது: "ஆண்டவனே, இந்த உடம்பு இருக்கும்போது நீ அருள் செய் அப்பா. இந்த உடம்பாகிய வீடு நெடுநாள் இராது என்று தெரியும். சின்னக் குடிசை இது. இரண்டு கால் நட்ட குடிசை. இந்தக் குடிசை குலைவதற்கு முன்னாலே நீ வந்து என்னைக் காத்து அருள வேண்டும். இந்த உடம்பை விட்ட பிறகு எனக்குக் கிடைக்கிற இன்ப அநுபவம் இந்த உடம்போடு இருக்கும்போதே ஏற்படவேண்டும்' என்று தம் அவாவை வெளிப்படுத்திப் பிரார்த்தனை செய்கிறார். "அப்படி அருளினால், கடவுளே, எந்தக் காலத்திலும் உன்னை மறக்க மாட்டேன்' என்றும் சொல்கிறார். இந்த வேண்டுகோளைத் திருச்செங் கோட்டில் சமர்ப்பிக்கிறார். திருச்செங்கோடு திருச்செங்கோட்டு மலையின் மேல் விளக்காக உள்ள முருகனை நோக்கி விண்ணப்பித்துக் கொள்கிறார். கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்பது ஒரு தாலூக்கா. அதன் தலைநகர் திருச்செங்கோடு. கொடிமாடச் செங்குன்றுர் என்று தேவாரத்தில் அதன் பெயர் வருகிறது. ஞானசம்பந்தப் பெருமான் அந்த ஊருக்குத் தொண்டர் கூட்டத்தோடு சென்றார். 174