பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 திருந்தாலும் தெரிந்திருக்கும்; தகப்பனாரைப் பலருக்குத் தெரியாது அல்லவா? அப்படி அந்தத் தலத்தில் பழைய பரமசிவம் இருக் கிறார். முருகனுக்கு உகந்த தலம், ஆறுபடை வீடுகளில் முதலா வது என்றே பலரும் அறிவார்கள். அப்படியின்றி முருகன், அம்மை, அப்பன் மூவருக்கும் சிறப்பு அமைந்த தலங்கள் சில உண்டு. வைத்தீசுவரன் கோயில் என்ற ஊரில் சிவபிரான் வைத்தியநாதப் பெருமானாக எழுந்தருளியிருக்கிறார். அம்பிகை யாகிய தையல் நாயகியின் சந்நிதானத்தில் பேய்கள் ஆடிக் கொண் டிருக்கும். முருகனுக்கு முத்துகுமாரசுவாமி என்று திருநாமம். அவன் சந்நிதியிலே தொண்டர்கள் வந்து குழுமுவார்கள். இப்படி அந்த ஊரில் மூன்று பேரும் சமமான நிலையில் இருக்கிறார்கள். அதுபோலவே திருச்செங்கோட்டில் அம்மையப்பராகிய அர்த்தநாரீசு வரருக்கும் பெருமை. முருகனுக்கும் பெருமை. அங்குள்ள முருகனை, “செங்கோட்டு வேலப்பன்' என்பார்கள். அப்படியே பெயர் வைத்துக் கொள்வார்கள், செங்கோடன் என்றும் வைத்துக் கொள்வதுண்டு. முருகனுடைய திருவுருவத்தில் வேலைத் தனியே சாத்த வேண்டிய அவசியமின்றி உருவத்தோடு சேர்ந்தே அமைந்திருக்கிறது. அருணகிரியார் ஈடுபாடு அத்தலத்தில் அருணகிரிநாதருக்கு மிகவும் ஈடுபாடு. கந்தர் அலங்காரத்தில் அந்தத் தலத்தைக் குறித்து ஐந்து பாட்டுச் சொல்லி யிருக்கிறார். திருப்புகழிலும் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அருணகிரியாருக்கு அத்தலத்தில் தனியான ஈடுபாடு உண் டென்பதற்கு மற்றொரு சான்று இருக்கிறது. கந்தர் அநுபூதி பாடும் போது அவர் இந்தப் பெளதிக உடம்பின் சம்பந்தம் இல்லாமல் எம்பெருமான் திருக்கரத்தில் கிளியாக அமர்ந்து பாடினாராம். பசுகரணங்கள் நழுவி, பதிகரணம் பெற்று, முருகன் பேசும் பேச்சையே, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலத் திருவாய் மலர்ந்தார். அதுவே கந்தர் அநுபூதி என்பர். அதில் அருணகிரியார் வேறு எந்தத் தலத்தையும் சொல்லவில்லை. திருச்செங்கோட்டை மாத்திரம் சொல்கிறார். "நாகாசல வேலவ" 176