பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 செப்பஞ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரா? அவ்வீடு அவனுக்குச் சொந்தம்; நமக்கு அல்ல” என்ற பகுத்தறிவோடு, 'நான் ஊருக்குப் போய் வரட்டுமா?" என்று சொல்லிக் கொள் கிறார். அந்த வீட்டைப் பொறுத்த வரையில் அவருக்குப் பகுத் தறிவு இருக்கிறது. ஆனால் தம் உடம்பாகிய வீட்டைப் பற்றிய அறிவு இல்லையே! இதைத் தமக்குச் சொந்தம் என்றல்லவா எண்ணிச் சீர்திருத்த நினைக்கிறார்? அருணகிரியார், "ஆண்டவனே. இந்தக் குடிசை ஐந்து பேர் வாழ நீ போட்டிருக்கிறாய். இது நிச்சயமாகக் குலைந்துவிடும். அதற்குமுன் என்னைக் காப்பாற்றியருள வேண்டும்' என்று விண்ணப்பம் செய்துகொள்கிறார். வருமுன் காப்போன் மனிதர்களுள் மூன்று வகை உண்டு. வந்த பின் காப்பவன் ஒருவன். வருகின்றபோது காப்பவன் மற்றொருவன். வருமுன் காப்பவன் மூன்றாமவன். முதல் இரண்டு பேரைக் காட்டிலும் வருமுன் காப்பவன் சிறந்த அறிவாளி. புயல் வருமே என்று எண்ணி நல்ல அஸ்திவாரம் போட்டு, கட்டிடத்தை நல்ல முறையில் கட்டிக் கொள்கிறவனுக்குப் புயல் வந்தால் பயம் இல்லை. அவன் கட்டிடம் ஒன்றும் ஆகாது. புயல் வருகிற போது பார்த்துக் கொள்ளலாம் என இருப்பவன் புயல் அடிக்கிறபோது அங்கும் இங்குமாக முட்டுக் கொடுத்து வீடு குலையாமல் இருக்கப் பாடுபடுவான். வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசிரத்தையாக இருப்பவன், புயல் வந்து, வீடு குலைந்து, எல்லாவிதமான பொருள்களும் போன பிற்பாடு அழுது கொண்டு இருப்பான். அருணகிரியார் வருமுன் காத்துக் கொண்டவர். ஏதோ ஒரு காலத்தில் வருகின்ற புயலுக்கே பலர் எத்தனையோ முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அடிக்கின்ற புயலாகிய மரணத்திலிருந்து தப்ப வேண்டுமானால் நாம் ஜாக்கிர தையாக இருக்க வேண்டாமா? ஒவ்வொரு நாளும் மரணப் புயல் அடிக்கின்றது என்பதற்குச் சாட்சி என்ன? மயானந்தான். அந்த அந்தச் சமய விதிப்படி புதைக்கிற இடமாக இருந்தாலும், எரிக்கிற இடமாக இருந்தாலும் எல்லோருக்கும் பொதுவான 184