பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார். 'உயிர் போய்விட்டது. அதனால் அழுகிறோம்' என்று அவர்கள் சொன்னார்கள். அவர், 'உயிர் போனதைப் பார்த்தீர்களா? அல்லது வந்ததையாவது பார்த்தீர்களா? இரண்டையும் நீங்கள் பார்க்கவில்லையே! கண்ணாலே பார்க்காத பொருளுக்காக ஏன் அழுகிறீர்கள்? கண்ணால் பார்த்த உடம்புதான் இருக்கிறதே. இதைக் கொண்டு போய்ப் பத்திரமாக வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள் என்றாராம். கண்ணாலே காணாவிட்டாலும் உடம்பை இயக்குவது உயிர் என்று நமது பகுத்தறிவுக்குத் தெரியும். உடம்புக்குள் உயிர் இருப்பதனாலே உடம்பு ஆடுகின்றது என்றால், உயிர் இயங்குவதற்கு காரணமாய் இருப்பது எது என்று நுட்பமாகச் சிந்தித்து உணரவேண்டும். சின்ன உயிர் உடம்பை இயக்குகிறது என்றால், சின்ன உயிரை இயக்குவது பெரிய உயிராக இருக்க வேண்டும். சின்ன உயிர் ஆத்மா. பெரிய உயிர் பரமாத்மா. பரமாத்மாவே ஆண்டவன். அவன் நமக்கு வெளிப்படையாகத் தோன்றாவிட்டாலும் துணை யாகவே இருக்கிறான். அதனால் அவனைத் தோன்றாத் துணை என்று சொல்வார்கள். நமக்குத் தோன்றாமல் இருக்கிற உயிர் உடம்பை இயக்குவது போல நமக்குத் தோன்றாமல் இருக்கும் ஆண்டவன் உயிரை இயங்க வைக்கிறான். இதனை உணர்ந்து கொண்டால் அவனை நாடத் தோன்றும். அந்த உணர்ச்சி நமக்கு இல்லை. உணர்ச்சி உள்ளவர் கள் முன் கூட்டியே அவன் துணையை நாடிப் பெறுவார்கள். முருகன் கருணை ஒரு மாதத்திற்கு அரிசி வேண்டுமே என்று சம்பளம் வந்த வுடன் ஒரு மூட்டை அரிசி வாங்கிப் போட நமக்குத் தெரிகிறது. ஒரு வருஷத்திற்கு வேண்டுமே என்று ஒரு டஜன் சட்டை வேட்டி வாங்கி வைத்துக் கொள்ளத் தெரிகிறது. நமக்குப் பிறந்திருக்கும் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமே என்று, அவள் பிறந்த அன்றிலிருந்தே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரி கிறது. இவை எல்லாம் பின்னால் வரும் காரியங்களை நினைந்து செய்கின்றவை அல்லவா? இப்படி எல்லா வகைகளிலும் வருமுன் காப்பவர்களாக நாம் இருந்தும், பிறந்துவிட்ட நமக்கு மரணம் நிச்சயமாக வந்துவிடுமே என எண்ணி, மரணத்திலிரு 187