பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் பத்திரிகையைப் பார்த்துத் தேவை விளம்பரங்களில் வரும் இடங்களுக்கெல்லாம் போட்டான். ஒன்றும் பலிக்கவில்லை. ஒருநாள் திருத்தணி போயிருந்த போது தற்செயலாக அவன் கண்ணில் ஒரு விளம்பரம் பட்டது. ஒரு கடையில் உட்கார்ந்து அதைப் பார்த்தவன் உடனே அங்கிருந்தே ஒரு விண்ணப்பம் எழுதிப் போட்டுவிட்டுச் சென்னைக்கு வந்தான். இங்கே வேலை கிடைத்துவிட்டது. அப்போது அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கும்! தன் ஆயுளில் அவன் எப்போது திருத்தணி போனாலும், நான் இந்த இடத்தில் போட்ட விண்ணப்பந்தான் ப்லித்ததப்பா!' என்று நினைத்துப் பூரிக்க மாட்டானா? அதைப் போல எத்தனையோ இடங்களில் எத்தனையோ வகையான விண்ணப்பங்களைப் போட்டவர் அருணகிரியார். தாம் உயிரோடு இருக்கும்போதே தம்மை வந்து ஆண்டு கொள்ள வேண்டுமென்று அவர் விண்ணப்பம் போட்ட இடம் திருச்செங் கோடு. அங்குள்ள முருகனைப் பார்த்து, 'தெய்வத் தன்மை பொருந்திய மலைமேல் வாழும் சுடரே கூர்மையான வேலைப் படைத்த தேவனே ஐவர்க்கு இடம் பெற, கால் இரண்டு கை இரண்டு வைத்துக் கட்டிக் கொடுத்திருக்கிற இந்த உடம்பாகிய வீடு குலைவதற்கு முன்னே வந்து என்னைக் காத்தருளுவாய் அப்பா அப்படிச் செய்தால் நான் உன்னை என்றும் மறவேன்' என்று கை தட்டிக் கொடுப்பது போலச் சொல்லி விண்ணப்பம் போட்டார். இந்த உடம்பு இருக்கும்போதே ஜீவன் முக்தன் ஆகவேண்டுமென்று அவருக்கு ஆசை. எல்லோரும் செத்துப் போகிற மாதிரி செத்துப்போகக்கூடாது; இவ்வுடம்பு மரணம் அடைந்து, நாற்றமெடுத்து அழியக்கூடாது என்பது அவர் அவா. விண்ணப்பம் போட்டார். அவர் எழுதிய விலாசம் என்ன? "தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ் சுடரே! வைவைத்த வேற்படை வானவனே!' என நீண்ட விவாசம் எழுதிப் போட்டார். பலித்தது அது பலித்துவிட்டது. மற்றவர்கள் மரணம் அடைவதைப் போல அல்லாமல், கிளியாக மாறி இறைவன் திருக்கரத்தில் உட்கார்ந்துவிட்டார். அவருடைய கருவி கரணங்கள் எல்லாம் மாறிவிட்டன. - i59