பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கிளியாக மாறிய நிலையிலிருந்து கந்தர் அநுபூதி பாடினார். எல்லாவற்றையும் மறந்து, தாம் சென்று சுற்றின தலங்களை எல்லாம் மறந்து, பாடினார். இருந்தாலும், "எனக்கு இந்நிலை கிடைத்தால், தெய்வத்திருமலைச் செங்கோட்டில் வாழும் சுடரே, வைவைத்த வேற்படை வானவனே, உனை நான் மறவேன்' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார் அல்லவா? அந்தத் தலத்தை மறக்கலாமா? எல்லாத் தலங்களையும் மறந்து விட்ட போதிலும், "நாகாசல வேலவ! நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே' என்று கந்தர் அநுபூதியில் நாகாசல வேலவனை மாத்திரம் மறக்காமல் பாடினார். "கூகாஎன என் கிளை கூடிஅழப் போகாவகை,மெய்ப்பொருள் பேசியவா!' 'எல்லோரும் கூகா எனக் கத்தி மார்பிலே அடித்துக் கொண்டு புரண்டு அழுது வருந்தும்படியாக மரணம் அடையாமல் என்னைக் காப்பாற்றினாயே!” என்றார். அதைத்தானே அவர் கேட்டார்? இதுவும் அதுவும் ஐவர்க் கிடம்பெறக் கால்இரண்டு ஒட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே என்றுதானே திருமலைச் செங்கோட்டில் வாழும் வேலனிடம் விண்ணப்பம் போட்டுக் கொண்டார் 'மறவேன் உனை நான்' என்றும் சொன்னார் அல்லவா? அவ்விண்ணப்பம் முருகனிடம் போயிற்று. அலங்காரத்தில் மிக நீளமாக எழுதியிருந்த விலாசம் ஞாபகத்திற்கு வரும்படியாக அநுபூதியில் சுருக்கிச் சொல்லி நினைவூட்டுகிறார்; "நாகாசல வேலவ!" என்கிறார். நாகாசலம் என்பதுதான் திருச்செங்கோடு. இங்கே தெய்வத் கிருமலைச் செங்கோடு என்றார். அங்கே நாகாசல என்று ஒரே 190