பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் காபி பக்தர் அவரிடம் மறுபடியும் கேட்டார்; மெல்லக் கேட்டார்: 'உங்களிடம் இருக்கும் சரக்கு எல்லாம் நயமானவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். மற்ற இடங்களில் கிடைப்ப வற்றைவிட உயர்ந்தவையே இங்கே உள்ளன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது சரிதான். ஆனால் உயர்ந்த ரகத்திலும் மேல் கீழ் என்று தரம் இருக்கிறதல்லவா? பணம் அதிகமாகக் கொடுத் தால் இருப்பவற்றுள் அருமையான சாமானைக் கொடுக்கலாமே. அப்படி அருமையாக யாராவது வாங்கினால் கொடுக்கும் சரக்கு உங்களிடம் உண்டா? மற்றவற்றைப் பற்றி இப்போது கவலை இல்லை. உங்களிடம் இருக்கும் காபிக் கொட்டையில் மிகவும் உயர்ந்த ரகத்தை எனக்குக் கொடுங்கள். என்ன விலையானாலும் கொடுக்கிறேன்' என்று சொன்னார். செட்டியார், 'அப்படியே செய்கிறேன். என்னிடம் உள்ள வற்றில் சிறந்ததையே தருகிறேன். ஆனால் இதை வெளியில் சொல்ல வேண்டாம். நமக்குள் இரகசியமாகவே இருக்கட்டும். உங்களைப் போல் பணத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்று சொல்லி நயமான காபிக் கொட்டையை அவருக்குக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு சென்ற காபி பக்தர் அதை உபயோகப் படுத்திப் பார்த்தார். உண்மையாகவே அது சிறந்ததாக இருந்தது. 'இந்தச் செட்டியார் நமக்கு மாத்திரம் உயர்ந்த ரகக் கொட்டையைக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். குட்டு வெளிப்பட்டது சில காலம் சென்றது. அவருக்கு ஊரில் உள்ளவர்கள் ந்ன் றாகப் பழக்கமாகி விட்டார்கள். பல நண்பர்கள் ஏற்பட்டார்கள். ஒய்ந்த வேளைகளில் அவர்கள் வீட்டுக்குப் போவதும் உரையாடு வதும் சிற்றுண்டி அருந்துவதுமாக அவர்களுக்கும் அவருக்கும் பழக்கம் முதிர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு நண்பர் அவரைச் சிற்றுண்டிக்கு அழைத்திருந்தார். விருந்தின்போது காபி கொடுத் தார். அது மிகவும் நன்றாக இருந்தது. காபியின் தரத்தை அறிவ தில் அவர் வல்லவர் அல்லவா? இதென்ன! நமக்குத்தான் நல்ல காபிக் கொட்டை கிடைக்கிறதென்று நினைத்தோம். செட்டியார் நமக்கு மட்டும் இரகசியமாக அந்தக் கொட்டையைத் தருகிறார். 193