பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் செட்டியார் முருகனுக்குச் செட்டி என்பதும் ஒரு பெயர். செட்டியென்ற சொல் செட்டு என்பதிலிருந்து பிறந்தது என்று சொல்வார்கள். சிரேஷ்டி என்ற வட சொல்லே செட்டி ஆயிற்றென்றும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். பிறர் பொருளையும் தம் பொருளைப் போல் பேணி, குறையப் பண்டத்தைக் கொடுக்காமல், கூட விலை சொல்லி வாங்காமல் வாணிகம் செய்கிறவர்கள் வணிகர்கள் என்று சங்க நூல்கள் சொல்கின்றன. அத்தகைய வணிகர்கள், சமுதாயத்துக்கு உபகாரம் செய்யும் உத்தமமான தொண்டர்கள்; சிறந்தவர்கள். அவர்களைச் சிரேஷ்டிகள் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது. - முருகனும் சிரேஷ்டமானவன். தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே! என்று அவனுடைய சிரேஷ்டத்தை அடுக்குகிறார் அருணகிரிநாதர். 'செட்டியப்பணை' என்று சிவபெருமானைச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகையில் முருகனைச் செட்டியென்று குறிக்கிறார். திருப்புகழில், 'செட்டி எனுமொர்திரு நாமக்கார' என்று வருகிறது. முருகனைச் செட்டி என்று வழங்கும் வழக்கை வைத்துக் கொண்டு ஒரு புலவர் வேடிக்கையாக ஒரு வாட்டுப் பாடுகிறார். முருகப்ப செட்டியாரிடம் வியாபாரம் செய்கிறவராக நின்று அவர், 'இன்ன சரக்கு வேண்டாம்; இது வேண்டும்' என்று கேட்கிறார். செட்டியார் திருவேரகமாகிய சுவாமி மலையில் கடை வைத்திருக்கிறவர். அது ஆறுபடை வீடுகளில் ஒன்று அல்லவா? “ஏரகத்துச் செட்டியாரே!' என்று அழைத்துத் தம் விருப்பத்தை வெளியிடுகிறார் புலவர். ஏரகத்துச் செட்டியார் 'செட்டியாரே, வெங்காயக் குழம்பு வைக்கலாமென்று வெங்காயமும் வெந்தயமும் வாங்கிக் கொண்டு போனேன். கவனம் இல்லாமையால் வெங்காயம் இருப்பதையே மறந்து விட்டேன். 195