பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 விட்டார். அந்தக் குழந்தைக்கு அதன் பெருமை தெரியுமா? அதையும் பழுக்காய்ச் செப்புடனே வைத்து விளையாடும்; வீசி எறியும்; நசுக்கும்; யாரேனும் திருடிப் போனால் பறி கொடுத்து விட்டு நிற்கும். "நீ குழந்தையின் கையில் உள்ள பொற்கிண்ணம் போல எனக்குத் தோற்றுகிறாய். உன்னை அரியவன் என்று நான் நினைக்கவில்லை' என்று பாடுகிறார் மணிவாசகர். “மழக் கையிலங்குபொற் கிண்ண மென்றலால் அரியை என்றுனைக் கருதுகின்றிலேல்.” பக்குவத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் ஏற்ற உப தேசத்தைச் செய்வது குருநாதர்களின் வழக்கம். அந்த உபதேசம் அந்தச் சமயத்தில் அந்த மாணாக்கனுக்கே உரிய சிறப்பான உபதேசம். அவன் ஒருவன் மாத்திரம் கேட்கும்படி செய்வதாலின் அது இரகசியம். அருணகிரியார் பெற்ற பேறு அருணகிரிநாதர் தம்முடைய துன்பங்களையெல்லாம் எடுத்துக் கூறி முருகனிடம் முறையிட்டார். அந்தக் கின்னங்களை முருகன் கேட்டான். அவற்றை எண்ணி இரகசியமாக உபதேசம் செய்தான். அதை உணர்ந்த போது அருணகிரியாருக்கு, "ஆகா இது என்ன அற்புதமான உபதேசம்! உய்ய முடியுமா என்ற ஏங்கி நின்ற எனக்கு ஏற்ற உபதேசம். முருகன் என்னிடத்தில் தனியான அன்பு கொண்டல்லவா இந்த இரகசியத்தை எனக்குச் சொன்னான்? அவன் கருணையை என்னவென்று சொல்வது! இப்படி யார் அவனிடம் உபதேசம் பெற்றிருக்க முடியும்? நான் பெற்ற வேறு பெரும் பேறு; யாருக்கும் கிடைக்காத பேறு" என்று ஆனந்தக் கூத்தாடினார். இரகசியம் வெளிப்பட்டது முருகனுடைய இயல்புகளையும், திருவிளையாடல்களையும் அவர் ஆராய்ந்து உணரத் தலைப்பட்டார். அவன் வள்ளி நாயகியை மணந்துகொண்ட கருணைத் திருவிளையாடலைப் பற்றித் தெரிந்து கொண்டார். அதன் கருத்தை எண்ண எண்ண அவருக்கு உணர்ச்சி விஞ்சியது. முருகப் பெருமானுடைய பெருங் கருணைத் திறத்தைக் காட்டும் திருவிளையாடல் அது 20C)