பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் என்பதை அவர் உணர்ந்தார். தமக்கு முருகன் எந்த நல்லுப தேசத்தை இரகசியமாக அருளினானோ, எத்தகைய இன்ப அநுபவத்தை அவன் பெறச் செய்தானோ, அதே கருணைச் செயலை உலகமெல்லாம் உணரும்படி காட்டியதே வள்ளி திருமணம் என்பதைத் தெளிந்தார். வள்ளியின் நிலை, அவள் இயல்பு, அவளுக்கும் முருகனுக்கும் உள்ள பழைய உரிமை, வேடரிடையே அப்பெருமாட்டி குறத்தியைப் போல வாழ்ந்த வகை, தான் வளர்ந்த குலத்துக்கு உரிய மரபுப்படி அவள் முருகனிடம் அன்பு பூண்டது, மற்றக் குறப் பெண்களைப்போலக் கிளி ஒட்டித் தினை காவல் புரிந்தது ஆகிய முன் கதைகளை யெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்தார். யோகமோ, ஞான விசாரமோ, நல்லவர் இணக்கமோ இல்லாத அப்பெருமாட்டியை அவள் இருந்த இடத்திற்கே உருமாறி வேடம் பூண்டு வந்து அவளிடம் காதல் பூண்டவன் போல அலமந்து ஏங்கி இரந்து, கோலம் மாறிக் காட்டி, இறுதியில் ஆனையைக் காட்டி, அப்பெருமாட்டி உயிருக்கு அஞ்சித் தன்னைச் சரணடையச் செய்து, ஆட்கொண்ட பெருங் கருணையை ஆழ்ந்து சிந்தித்தார். முருகன் தமக்கு உபதேசம் செய்து அருளநுபவம் தூய்க்கும்படி அருளிய செயலுக்கும் அந்த வரலாற்றுக்கும் ஒப்புமை இருப் பதைக் கண்டார். வள்ளி நாயகியை முருகன் ஆட்கொண்ட வரலாறு முருகனுடைய கருணைச் சிறப்பைக் காட்டுவது. அந்தக் கருணையினால்தான் அவன் தம்மையும் ஆண்டு கொண்டான் என்பதை ஒப்பு நோக்கி உணர்ந்தார். நமக்கு யாரும் அறியாத இரகசியமாக உபதேசித்து, அநுபவம் பெற அருளியது இது என்று எண்ணியிருந்தோமே! அந்தக் காலத்தில் மலைவாணர் அறிய நடைபெற்ற வள்ளி திருமணத்திலேயே இந்தக் கருணை வெளியாகிக் கிடக்கிறதே! என்று வியந்தார். அதை வித்தகமாகச் சொல்லப் புகுந்தார். கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம், குறிச்சி வெளியாக்கி விட்டது. தமக்கு இறைவன் அருள் கிட்டிய நாளை அன்று என்று சுட்டுகிறார். அதை அவர் நெஞ்சு மாத்திரம் அறியும்; நெஞ்சறி 2O1