பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! மனிதன் வாழ்ந்தால் அவன் எந்தக் காரியத்தைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நிச்சயமாக ஒர் அநுபவத்தைப் பெறத்தான் வேண்டும். அவன் ஞானியாய் இருந்தாலும் அஞ்ஞானியாய் இருந்தாலும், செல்வம் பெற்ற சீமானாக இருந்தாலும், வறுமை வாய்ப்பட்டு உழலும் ஏழையாய் இருந்தாலும், கலை வல்லு நனாய் இருந்தாலும் கலைஞானம் சிறிதுமில்லாக் கசடனாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கு உட்பட்டே ஆக வேண்டும். மற்ற அநுபவங்கள் எல்லோருக்கும் பொது என்று சொல்ல இயலாது. எல்லோரும் கல்யாணம் பண்ணிக் கொண்டு இருப்பார்கள் என்று சொல்ல வழி இல்லை. பிரம்மசாரியாகவே இருப்பார்கள் என்று சொல்ல வும் முடியாது. வாழ்நாளில் பலவிதமான ஜூரமும் அடைந்தார் கள் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கலாம். 'ஒருமுறைகூட எனக்கு ஜூரம் வந்ததே கிடையாது' என்கின்ற மக்களும் இருக் கிறார்கள். ஆனால், நிச்சயமாக ஒரு சம்பவம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நிகழும். அதுதான் மரணம். பிறந்தவர் எல்லோரும் மரணம் அடைவது என்பது உறுதி. அதிசயம் தர்மபுத்திரரைப் பார்த்து ஒரு யட்சன், "இந்த உலகத்தில் எது அதிசயம்?' என்று கேட்டானாம். 'பிறந்தவர்கள் இறந்து போவது நிச்சயம் என்பதை உணர்ந்தும், அதை மறந்து, மக்கள் வாழ்க்கை நடத்துகிறார்களே, அது பெரிய அதிசயம்' என்று அவர் சொன் னாராம். அந்த விடை, உலகில் பிறந்த மக்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், மரணம் என்ற சம்பவத்திற்கு ட்பட்டே ஆகவேண்டுமென்பதை நினைப்பூட்டுகிறது.