பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்: அஞ்சுதலும் விஞ்சுதலும் மரணத்தைக் கண்டு, அதனாலே வருகின்ற துன்பத்தை நினைந்து நாம் வருந்துகிறோம். நாம் என்ன? பல காலம் இறைவன் திருவருளில் ஈடுபட்ட பல பெரியோர்களும் அஞ்சியிருக்கிறார்கள். அந்த அச்சத்தைப் கடந்தவர் மிக அரியர். அந்தத் தைரியம் யாருக் கேனும் இருக்குமானால், அதை உண்டாக்கியது பெரிய அருள் என்றே சொல்ல வேண்டும். அதைப் பெறும்வரையில் பலர் அஞ்சி யிருக்கிறார்கள். பின்னர் அஞ்சாமல் விஞ்சியும் இருக்கிறார்கள். "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடிய அப்பரைப் போலவே ஆழ்வாரும், 'நாவலிட்டுழிதர் கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே" என்கிறார்; “எங்கள் உயிரைக் கொண்டு போவதற்கு யமன் தூதுவர் வந்தால் அவர்கள் தலையில் ஏறி மிதிப்போம்' என்று கூறுகிறார். அருணகிரியார் செய்த புதுமைகள் இப்படிப் பேசிய கூட்டத்தினரில் ஒருவர் அருணகிரிநாதர். அவரும் முன்னோர்கள் சொன்னதையே சொன்னாலும், அவர் சொல்வதில் ஒரு புதுமை இருப்பதைக் காணலாம். அவர் பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவருடைய பாடல்கள் எல்லாம் இயற்பாட்டாகவும், இசைப் பாட்டாகவும் அமைந்தவை. இலக்கிய மாகப் படித்துச் சுவைத்தாலும், இசையாகச் சந்தத்தோடும் தாளத் தோடும் பாடக்கூடிய வகையிலும் அமைந்தவை அவை. சந்தப் பாட்டுக்களை மிகுதியாகப் பாடிய பெருமை அருணகிரிநாத ருடையது. இது ஒரு புதுமை. அவருக்கும் முந்தி, பல பேர்கள் எத்தனையோ தெய்வங் களைப் பற்றிப் பாடினார்கள். ஆனால், அவரவர்கள் அவரவர் களுடைய உபாசனா தெய்வத்தை உயர்த்தியும், மற்ற மற்றத் தெய்வங்களைத் தாழ்த்தியும் பாடியிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது இந்தக் காலத்துச் சமரசஞானிகளுக்கு, "ஒருவருக்கொருவர் பகை உண்டாகும் வகையில் இவர்கள் கூடப் பாடியிருக்கிறார் களே! என்று தோன்றும். அருணகிரி நாதரோ இக்காலத்தவரும் போற்றும் சமரச ஞானம் படைத்தவர். திருமாலினுடைய 211