பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்: இருந்தால், அவன் சங்கற்பம் செய்து கொண்ட நினைப்பினால் உடம்பில் முறுக்கு ஏறி, நரம்பில் முறுக்கு ஏறி, நோய் தீர்ந்த வனாகிறான். 'யத்பாவம் தத்பவதி' என்பது ஒரு வடமொழி வாக்கியம். எதை நினைக்கிறானோ அது கிடைக்கிறது என்று பொருள். 'நான் சக்தி உடையவன்; வல்லமை உடையவன்; எமனை வெல்பவன் என்ற நினைப்பினால் எப்படிச் சக்தி ஏறி, முறுக்கு ஏறிச் சக்தியையும் வல்லமையையும் உடையவனாக ஆகின்றானோ, அதேபோலத்தான் ஒருவன், 'எனக்குச் சக்தி இல்லை; வல்லமை இல்லை' என்ற நினைப்பினால் உடல் சக்தி தளர்ந்து, முறுக்குத் தளர்ந்து சக்தி அற்றவனாகவும், வல்லமை அற்றவனாகவும் ஆகிவிடுகிறான். உள்ளத்தில் ஏற்படும் பயத்தினாலேயே கட்டு விட்டு உடம்பு நலிகிறது. "எந்தக் காரியத்தையும் சாதிப்பேன்' என்று நினைக்கிற நினைப்பு நரம்பில் முறுக்கு ஏற்றிப் பல காரியங்களைச் சாதிக்கச் செய்கிறது. காம உணர்ச்சி மிகுதியாக உள்ளவன் மனத்தில் ஏறுகின்ற முறுக்கு, தான் விரும்பிய பெண்ணையே எத்தனை துன்பம் வந்தாலும் பெறும்படியாகச் செய்யவில்லையா? அகப்பட்டுக் கொள்ளக் கூடாது; எப்படியும் தப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் முறுக்கு ஏறிய திருடன் ஏற முடியாத பெரிய மாடியில் ஏறிக் குதிப்பதில்லையா? சாதாரண நேரத்தில் அக்காரியங்களை அவர்களால் செய்ய முடியாது. ஆகவே, எமனை எதிர்க்கின்ற முறுக்கை நம் உள்ளங்களில் ஏற்ற வேண்டுமென்ற கருத்தினால் அருணகிரிநாதர் இந்தப் பாட்டைச் சொன்னார். இதைப் பலமுறை சொல்லிச் சொல்லிப் பழகினால் எமனைக் கண்டு அஞ்சுகின்ற கிலி பறந்து போய் விடும். அதுவே முக்காற் பங்கு கால ஜயம் என்று சொல்லவேண்டும். "துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்" என்று திருமூலர் பேசுகின்றார். "எவன் சந்தேகப்படுகிறானோ, அவன் அழிந்து ஒழிகிறான்' என்று கீதை சொல்கிறது. ஆகவே, சந்தேகத்தை நீக்கித் துணிவுடன், 'என்னை எமன் ஒன்றும் செய்ய முடியாது. எமனை நான் முருகப் பெருமானின் அருளைக் கொண்டே கொன்று விடுவேன்' எனச் சொல்லிச் சொல்லி, நம் க.சொ.11-15 215