பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார் தம்பம் நாட்டினார்கள். ஆகவே, இந்த இடத்திற்கு ஜயந்தி எனப் பெயர் வந்தது. ஜயந்தியாகிய செந்திலில் வெற்றிவேல் பெருமான் இருக்கிறார். அந்தச் செந்தில் வேலவனிடத்திலிருந்து நான் ஓர் ஆயுதம் பெற்றிருக்கிறேன். அது என்ன தெரியுமா? என்று மேலே சொல்லுகிறார். செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள். செந்தில் வேலனுக்குத் தொண்டு என்று அந்தப் படைக் கலத்துக்குப் பெயர். அவனிடத்தில் தொண்டு பூண்ட அடிமை இவன் என்ற வலிமையே அந்த ஆயுதம். அந்தப் படை அகக்கண்ணுக்குப் புலப்படுமேயன்றி, புறக்கண்ணுக்குப் புலப்படுவது அன்று. தொண்டும் ஞானமும் ஆண்டவனுக்குத் தொண்டு பண்ணுவதாவது என்ன? தினந் தோறும் அர்ச்சனை பண்ணிவிட்டு, ஒருமுறை கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப் படை முதலியவற்றைப் பாராயணம் செய்துவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை ஆறுபடை வீடுகளையும் தரிசித்து வருவதோடு நிற்பது அன்று. இறைவனிடத் தில் உண்மை அன்பு உடையவன், எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாலிப்பவனாக இருப்பான். பிற உயிர்களிடத்தும் அன்பு செய்வதை மறந்து என்னதான் ஆண்டவனிடத்தில் அன்பு செய்வதாகச் சொன்னாலும், அவன் ஆண்டவனுக்கு உண்மைத் தொண்டனாக முடியாது. அவன் அர்ச்சனையை ஆண்டவன் ஏற்கமாட்டான். அருணகிரியார் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பார்க்கின்ற கருணையாளர். 'என்னுடைய கையில் ஒரு சுடர் வடிவாள் இருக்கிறது. பிரகாசம் பொருந்திய கூர்மை யான வாள் அது. அந்த வாளுக்கு இரண்டு பெயர். செந்தில் வேலனுக்குத் தொண்டு என்பது ஒரு பெயர். அந்த வாள் ஞான சொரூபம். அதற்கு அவிரோத ஞானம் என்பதும் பெயர் என்று குறிப்பிடுகிறார். தொண்டு என்பது கர்மம்; செந்தில் வேலனுக்குத் தொண்டு என்பது பக்தி; அவிரோத ஞானம் என்பது ஞானம். "கர்மம், பக்தி, ஞானம் என்ற மூன்றும் வெவ்வேறாக இருக்க, அவற்றை இவர் ஒன்றாகச் சொல்கிறாரே! என்ற ஐயம் இங்கே எழலாம். 219