பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார் "விறகில் தீயினன், பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்; உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.” இறைவன் தீயைப் போலவும் வெண்ணெயைப் போலவும் ஒளியைப் போலவும் மறைந்து நிற்கிறான். கடையும் பொருள் மூன்றிலிருந்து வெளிப்படுபவை அவை. மூன்றும் கடையும் பொருள்களே ஆயினும் கடையும் முயற்சியில் வேற்றுமை உண்டு. விறகை நன்றாக முறுக வாங்கிக் கடைந்தால்தான் நெருப்பு உண்டாகும். பாலில் வெண்ணெய் தோன்ற அவ்வளவு பலம் வேண்டாம்; வாங்கிக் கடைய வேண்டும். இவ்வளவு சிரமங்கூட மணிக்கு வேண்டியதில்லை; கடைந்தாலே போதும்; ஒளி தோன்றிவிடும். அழுந்த முறுகக் கடைய வேண்டியது விறகு, நடுத்தரமாகக் கடைவது பால். மெல்லக் கடைவது மணி. இப்படியே மக்களில் முதல் இடை கடை என்று மூன்று வகை யான மன இயல்புடையவர்கள் இருக்கிறார்கள். பலவகையால் முயன்று பக்குவம் பெறுவாரும் ஓரளவு முயன்று அது பெறு வாரும் சிறிதளவில் அது பெறுவாரும் உண்டு. எத்தகைய முயற்சி செய்தால் இறைவனை உணரலாமென் பதை அந்த உவமையின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். நாவுக்கரசர் நவில்கிறார், கடையும் செயலை இன்னவாறு செய்ய வேண்டும் என்று. தாய்மார்கள் தயிர் கடைவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு கம்பத்தை ஒட்டிச் சட்டியை வைத்து, அதிலே தயிரை ஊற்றி, மத்தைச் சட்டியில் இட்டு அதைக் கம்பத்தோடு தொடர்புடைய தாக்கி, மத்தைச் சுற்றியுள்ள கயிற்றைப் பிடித்து இழுத்துத் தயிர் கடைகிறார்கள். மத்துச் சுழலும் போது அதற்கு ஆதாரமாக இருக்கிற கம்பம் அசையாமல் இருக்க வேண்டும். அது ஆடினால் எத்தனை தான் கடைந்தாலும் வெண்ணெய் திரளாது. தயிர்ச் சட்டியே உடைந்தாலும் உடைந்துவிடும். . கடவுளை உணர்வது கடைவது போன்ற செயலென்றால், அதற்கும் சாதனங்கள் உண்டு. கடைவதற்கு நட்ட கோலும், கயிறும் வேண்டும். இறைவனைக் காணும் முயற்சிக்கும் ஒரு கோல் வேண்டும்; கயிறு வேண்டும். 221.