பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 "உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே." அன்பு என்ற கோலை நட்டு, உணர்வு என்ற கயிற்றைக் கொண்டு கடைய வேண்டும். உறவு என்பது பக்தி. அது அசையாமல், தள ராததாக இருக்க வேண்டும். அசஞ்சல் பக்தி என்று கூறுவார்கள். கடைவதற்குக் கோல் நடுவது முதல் காரியம். கயிறு மாறும்; சட்டி மாறும்; தயிர் மாறும்; கடைபவர் மாறலாம். ஆனால் நட்ட கம்பம் மாத்திரம் நிலையாக இருக்கும். அதுபோல இறைவனைக் கடைந்து உணரும் செயலில் பக்தி இன்றியமையாதது. மற்ற வற்றில் வேறுபட்ட அளவு இருப்பினும், தளர்வற்ற அன்பு அல்லது பக்தி மாறாமல் இருக்க வேண்டும். உணர்வு அல்லது ஞானத்தைக் கயிறாகச் சொல்கிறார். ஞானம் என்பது வர வர வளர்வது. அறியப்படும் பொருள் விரிய விரிய ஞானம் விரிகிறது. அதில் பல நிலைகள் உண்டு. ஆதலின் கயிற்றை உவமையாகச் சொன்னார். இந்த இரண்டோடு, கடைவதாகிய செயலும் வேண்டும். அது இல்லாவிட்டால் மற்றவை இருந்து பயன் இல்லை. உறவு என்பது பக்தி; உணர்வு என்பது ஞானம்; கடைதல் கர்மம். இந்த மூன்றும் சேர்ந்து முயற்சி செய்தால் இறைவன் முன் நிற்பான். மூன்று வகை மக்கள் இறைவனை உணர்ந்து கொள்ளும் முயற்சியில் மூன்று வகையினர் உண்டென்று முன்னே சொன்னேன். விறகுக் கட்டை மனிதர். பால் மனிதர், மணி மனிதர் என்று அவர்களுக்குப் பேர் கொடுக்கலாம். பிறவித் துன்பத்தில் உழன்று உழன்று தடித்துப் போன உள்ளம் படைத்தவர்களுக்கு எளிதில் இறைவனைப் பற்றிய உணர்வு வருவதில்லை. வாழ்க்கையில் மிகவும் அல்ல லுற்று நைந்து போன பிறகே அவர்கள் அறிவு பெறுகிறார்கள். அடுத்தபடி பாலைப் போன்ற உள்ளம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். குருநாதனுடைய கிருபையால் அவர்கள் அருள் பெறுகிறார்கள். 222