பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! சுடர்வடிவாள். சுடர்-தேசு, வடி-கூர்மை. கண் உடையவனுக்குத்தான் ஒளியைப் பார்க்க முடியும்; தேசு பொருந்தி விளங்குகின்ற வாளைக் காண முடியும். கண் இல்லாதவன் வாள் தன்மேல் படும்போதுதான் அதன் கூர்மையால் உணரமுடியும். "இந்த ஞானச் சுடர் வாளைக் கண்டாய் அல்லவா?' என்றார் அருணகிரியார். யமனுக்கு அந்தகன் என்பது ஒரு பேர். அச்சொல்லுக்குக் குருடன் என்ற பொருள் உண்டல்லவா? ஆகையால் உடனே, "ஓ, நீ அந்தகன் அல்லவா? உனக்கு இந்த வாளின் சுடர் எங்கே தெரியப் போகிறது? உடம்பிலே கொஞ்சம் கீறினால்தான் தெரியும். எங்கே, என் கைக்கு எட்டும்படி வா பார்க்கலாம்; இதன் கூர்மையைக் காட்டுகிறேன்' என்கிறார். செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாயடா அந்தகா வந்து பார், என்றன் கைக்கு எட்டவே. 'ஏதோ நான் வெற்று வேட்டு என்று நினைக்காதே. என் கையில் பள பளவென்று மின்னுகின்ற கத்தியை நீ பார்த்தாலும் நாடகக் காரன் கையிலுள்ள கத்தி என்று எண்ணிவிடுவாய். சாதாரணக் கத்தியைவிட அது அதிகப் பளபள வென்றுதான் இருக்கும். இது ரேக்கு ஒட்டிய அக்கத்தியைப் போலக் கண்ணுக்கு மாத்திரம் பளபளக்கின்ற சுடர்வாள் என்று எண்ணிவிடாதே. ஏ அந்தகா, என் கைக்கு எட்டும்படியாகச் சற்று என் அருகில் வந்து பாரேன். இந்தக் கத்தியின் கூர்மை எவ்வளவு என்பதையும் காட்டுகிறேன்" எனச் சொல்வதுபோல இருக்கிறது இது. அவரைப் போலவே நாமும் தைரியமாகச் சொல்ல வேண்டு மென்றால் நமது நெஞ்சங்களிலும் முறுக்கு ஏற வேண்டும். செந்தில் வேலனுக்குத் தொண்டரானால்தான் முறுக்கு ஏறும். அவனுக்குத் தொண்டராக மாத்திரம் இருந்து கொண்டு உலகிலுள்ள உயிர்களிடத்து அன்பு இல்லாமல் இருத்தலாகாது. அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று கூறுபோட்டுக் கொண்டு இருந்தால் கூற்றுவனுக்குத்தான் இரையாகும்படி நேரிடும். கூற்று வனையே வெட்டி வீழ்த்த வேண்டுமென்றால் கூறுபோட்டுப் 229