பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! விழத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டிவிடுவேன்' என்று சொல்லும் இந்த அறைகூவலை நாம் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருந்தால் நமது உள்ளத்தில் முறுக்கு ஏறும். நரம்புகளில் முறுக்கு ஏறும். நம்மிடம் உள்ள கோழைத் தன்மை போகும். தண்டா யுதமும் திரிசூல மும்விழத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில் வேலனுக்குத் தொண்டா கியஎன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாஅந்த கா வந்து பார்சற்றுஎன் கைக்கெட்டவே. (அந்தகா நீ பிடித்த தண்டாயுதமும் திரிசூலமும் விழும்படியாக உன்னைத் தாக்கி நீ திண்டாடும்படியாக வெட்டி விழச் செய்வேன்; திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் வடிவேற் பெருமானுக்குத் தொண்டு செய்யும் இயல்பாகிய எனது அவிரோத ஞானம் என்னும் சுடர்வீசும் கூரிய வாளைக் கண்டாயே; அடா, இங்கே சற்று என் கைக்கு எட்டும்படியாக வந்து பார். திண்டாட - செயலிழந்து தவிக்க. தொண்டு - தொழும்பு; அடியா னாகிய தன்மை. வடி-கூர்மை) க.சொ.11-16 231