பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 லாப நஷ்டக் கணக்கு இப்படி மனிதன் நல்லவற்றைப் புலன்கள் அநுபவிக்கும் போது இன்புறுகிறான். அல்லாதனவற்றை அநுபவிக்கும் போது வெறுப்புக் கொள்கிறான். நல்லதை உணரும்போது லாபம், அல்லாததை உணரும்போது நஷ்டம் என்று வைத்துக் கொள்ள லாம். லாபமும் நஷ்டமும் இல்லாத நிலை ஒன்று உண்டு. எல்லா அங்கங்களையும் பூர்ணமாகப் பெற்றிருப்பவன், அவற்றைப் பெற்றிருப்பதன் பயனை நன்கு உணர்ந்து, அவ்வ வற்றுக்குரிய ஒழுக்க நெறியில் நின்று உத்தமமான காரியங்களைச் செய்யும்போது லாபம் அடைகிறான். அதமமான வழியில் தன் உறுப்புக்களைச் செலுத்துகின்றவனுக்கு நஷ்டம். உறுப்பு இல்லா மையினால் உத்தமமான காரியத்தைச் செய்து லாபம் அடையா விட்டாலும், அதமமான காரியத்தைச் செய்வதனால் வருகின்ற நஷ்டம் இல்லை. ஆகவே அவனுக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. காது படைத்திருப்பதன் பயனாக நல்ல இனிய திருப்புகழைக் கேட்டால் லாபம். கேட்கத் தகாத ஆபாசமானவற்றைக் கேட்டால் நஷ்டம். காது இல்லாதவனுக்கு எதையுமே கேட்க முடியாது. ஆகவே லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. வாய் படைத்திருப்பதன் பயனாகக் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவற்றைச் சொன்னால் லாபம். சொல்லத்தகாத வற்றை, இன்னாதனவற்றை, பொய்யைச் சொன்னால் நஷ்டம். ஊமை எதையுமே சொல்ல முடியாது. ஆகவே லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. வாயைப் படைத்து, எம்பெருமான் புகழைச் சொல்லாமல் இன்னாதன பேசித் திரிகிறவனைவிட ஊமை நல்லவன் என்று சொல்லவேண்டும். கண்ணைப் படைத்து எம்பெருமான் திரு வடியைப் பார்த்துப் பார்த்து மகிழாமல் பார்க்கத் தகாதவற்றைப் பார்த்துத் திரிகின்றானே அவனைவிடக் குருடன் நல்லவன். ஊமை செய்த பாவங்களை எல்லாம் பட்டியலாக எழுதினால், வாய் படைத்திருப்பதன் பயனாக ஒருவன் செய்கின்ற பாவங்கள் இரா. 234