பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தான் செய்ய நினைத்த காரியம் சிறந்தது என்று முடிவு கண்டால் அதைச் செய்வான்; செய்யத் தகாது எனக் கண்டால் அதைச் செய்யாமல் விட்டுவிடுவான். சக்கரவர்த்தி திருமகனாகிய இராமபிரான் அப்படித்தான் செய்தார். இராவணனோடு போர் புரிவதற்காகக் கடலைத் தாண்டிச் சென்றார். விபீஷணன் இராமபிரானைச் சரண் என்று வந்து அடைந்தான். சரண் அடைந்த அவனைத் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ளவேண்டுமென்பது அவருடைய எண்ணம். இருந்தாலும் அமைச்சர்களின் கருத்தையும் அறிய வேண்டு மென்று எண்ணினார். தம் கட்சியில் புதிதாகச் சேர்த்துக் கொள்ள விரும்புகிற விபீஷணன் தங்களுக்கு அநுகூலமாக இருப்பானா? பகைவர்கள் கட்சியிலிருந்து வந்தவனாயிற்றே; இராவணனுடைய சொந்தத் தம்பி. அவனைப் பற்றி எதுவுமே தெரியாதபோது அவனை ஏற்றுக் கொள்ளலாமா? இதைப் பற்றி விவாதிக்க மந்திரி சபையைக் கூட்டி ஆலோசித்தார். மந்திரிகளுக்கு மதிப்பு வைத்து அவர்களுடைய அறிவைத் தம் அறிவுக்குத் துணையாகக் கொண்டார். அவருக்கு நல்ல மந்திரியாக அநுமன் வாய்த்திருந்தான். இரண்டு மந்திரிகள் ஆத்மாவாகிய அரசன் புத்தி, மனம் என்ற இரண்டு மந்திரிக ளைக் கொண்டு எப்பொழுதும் வேலை செய்கிறான். புத்தி என்ற நல்ல மந்திரியின் வேலை அதிகமாக இருந்தால் உய்யலாம். மனம் என்ற கெட்ட மந்திரியின் வேலை அதிகமாக இருந்தால் கீழேதான் போகவேண்டியிருக்கும். புத்தி அதிகமாக வேலை செய்தால் மனம் புத்திக்கு அநுகூலமாக இருக்கும். மனத்தின் ஆற்றல் கூடுதலாக இருந்தால் புத்தி மடங்கிவிடும். மனம் என்ற கெட்ட மந்திரியின் கைப்பொம்மையாகிவிட்டால் உலகத்திலுள்ள கண்ணியில் சிக்கிக் கொள்ள நேரும். இந்த உடம்பாகிய கோட்டையில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இரண்டு பக்கத்திலும் அகழ். இந்த இரண்டு அகழிலும் விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாவம், புண்ணியம் என்ற இரண்டு அகழிலும் விழாமல் நின்று மேலும் புதிய சங்கடங் களை உண்டு பண்ணிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 236