பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 உடம்பின் குறை நமக்குக் கிடைத்த இந்த உடம்பு சித்தர்களுக்குக் கிடைத்தது போல நீண்ட நாள் வாழும் உடல் அல்ல. தேவர்களுக்குக் கிடைத்துள்ள ஒளிமிக்க சரீரமும் அல்ல. ஒரு மனிதன் நூறு ஆண்டு வாழலாம் என்று புத்தகம் சொல்லுகிறது. இந்தியாவில் உள்ளவர்களின் சராசரி வயசு இருபத்தைந்தே. இந்தக் குறுகிய காலமாகிய வாழ்வை உடையது இந்த உடம்பு. அதனோடு பல குறைபாடுகளை உடையது. வறியவனுக்கு ஒரு காணி நிலம் கிடைத்ததுபோல இது நமக்குக் கிடைத்திருக்கிறது. இதை எவ்வளவு சிறப்பான வகையில் இயக்கிப் பயன் பெற வேண்டுமோ அப்படிச் செய்வதே நல்லது. மக்களுக்கு மிக்க நன்மையைச் செய்ய வேண்டுமென்று ஒருவன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றான். மந்திரியாகவும் ஆனான். அவன் மந்திரியாக இருக்கும் காலம் இரண்டு வருஷங்கள் தாம் என்றால், அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளைத் தன்னால் முடிந்த அளவு செய்து விட வேண்டுமென்று முயல்வான். கெட்டவனாக இருந்தால் தனக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பான்; அதிகாரத்தைத் தீயமுறையில் செலுத்துவான்; அதனால் விரைவில் பதவியிலிருந்தும் நீக்கப்படுவான். பயனுள்ள வாழ்வு மிகக் குறைந்த காலத்துக்கு மிகக் குறைபாடு உள்ள உடம்பைப் படைத்திருக்கும் மனிதர்களில் நல்லவர்கள் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே செய்ய வேண்டிய நல்ல செயல் களைச் செய்கிறார்கள். வாழ்வு சில ஆண்டுகளேயானாலும் ஒவ்வோராண்டையும் 365 நாட்களாகப் பிரித்து, ஒவ்வொரு நாளையும் 24 மணியாகப் பிரித்து, ஒவ்வொரு மணியையும் 60 நிமிஷமாகப் பிரித்து, ஒவ்வொரு நிமிஷத்தையும் 60 விநாடி களாகப் பிரித்து வைத்துக் கொண்டு கணக்குப் பண்ணி வாழ் கிறார்கள். ஒருவேளைகூட வாழத் தெரியாதவன்தான், நான் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவோ காரியம் செய்து விடுவேன்' என்பான். தான் வாழும் ஒவ்வொரு கணத்தையும் பயனுள்ளதாகக் கழிப்பவன் நன்றாக வாழ்பவன். 238