பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அப்படியே, பின்னால் இருக்கிற ஆளுக்கும், முன்னால் உள்ள பொம்மைகளுக்கும் இடையே தொடர்பாக உள்ள கயிறு அறுந்துவிட்டால், எவ்வளவுதான் பின்னால் இருக்கிற ஆள் ஆடினாலும், மேடையிலுள்ள பொம்மைகள் ஆடா. பொம்மைகள் ஆடவேண்டுமானால் கயிறு வேண்டும். ஒர் ஆள் பின்னால் நின்று கொண்டு கயிற்றின் மூலம் மேடையில் உள்ள பல பொம்மைகளை ஆடவைக்கிறான். அதற்கு மாறாக அருணகிரியார் இங்கே சொல்கிறார். பின்னால் ஐந்து பேர்கள் சேர்ந்து கொண்டு ஒரு பொம்மையை ஆட்டி வைக்கிறார்களாம். பின்னால் இருந்து ஆட்டுகின்றவர்களோ ஐந்து பேர். ஆடுவது ஒரு பொருள். இந்த ஆட்டம் நிகழும் மேடை எங்கே அமைந்திருக்கிறது? உலகம் என்ற மேடையிலே ஆட்டம் நடக்கிறது. கண்ணியில் சிக்குதல் மிருகங்களை வேட்டை ஆடுகின்ற வேடர்கள் அவை நடமாடு கின்ற இடங்களில் எல்லாம் வலைகளைப் பரப்பி வைத்திருப் பார்கள். அவற்றில் மிருகங்கள் வந்து சிக்கிக் கொள்ளும். அவ் வண்ணமே இந்த உலகம் முழுவதும் எங்கே போனாலும் அங்கே நெஞ்சம் சிக்கிக் கொள்கிற கண்ணிகள் நிரம்பியிருக்கின்றன. நெஞ்சம் என்ற ஒன்று காலில் கத்தி கட்டிக் கொண்டு போனா லொழியக் கண்ட இடங்களில் எல்லாம் வீழ்ந்து சிக்கிக் கொள்ளும். அந்தக் கத்திக்கு ஞானம் என்று பெயர். பார்ப்பதற்கு நல்ல இடமாக இருக்கிறதே என்று கத்தி இல்லாமல் நெஞ்சம் அந்த இடத்திற்குப் போனால், அங்கே சிக்கிக் கொள்ளும். இறைவன் திருக்கோயிலை நாடிப் போனாலும் அங்கேயுள்ள கண்ணிகளில் சிக்கிக் கொள்ளும். அது எப்படி? எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டுக் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, மூர்த்திகளைச் சிலர் பிரதிஷ்டை செய் கிறார்கள்; அந்தக் கோயில்களின் கும்பங்களையும், மூர்த்திகளையுமே சிலர் திருடிக் கொண்டு போகவில்லையா? கோயிலுக்கு வந்தவன் கண்ணிகளில் சிக்கிக் கொண்டுதான் இம்மாதிரியான திருட்டுக் காரியங்களைச் செய்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. 14.