பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் வாடி விடுகிறது. உடம்போடு எத்தனை காலம் இருக்கின் றோமோ அத்தனை காலமும் அதற்கு வேலை கொடுக்கவேண்டும். மற்ற வேலைகளுக்கு இட எல்லை, கால எல்லை உண்டு. எந்தப் பொருளுக்குக் கால இட எல்லை இல்லையோ அந்தப் பொருளை நினைக்கும் வேலைக்கும் கால எல்லையே இல்லை. பரம்பொருளைத் தியானம் செய்யத் தலைப்பட்டால் காலம் போவதே தெரியாது. ஒய்வு பெற்ற பிறகு நினைக்கத் தொடங் கினால் எளிதில் அந்த முயற்சி பலிக்காது. மற்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோதே இந்த வேலையையும் இடையிடையே செய்து வந்தால், நீண்ட ஒய்வு கிடைக்கும்போது இதையே செய்யும் திறமை உண்டாகும். அதற்கு ஏற்ற பழக்கங்களை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன் சாப்பாட்டை இறைவனுக்கு நிவேதனம் பண்ணுகிறோம். முதல் கவளத்தை எடுத்து வாயில் போடும்போதே இறைவனை நினைக் கிறோம். எப்பொழுதுமே கடவுளை நினைந்து கொண்டிருக்கும் ஆற்றல் நமக்கு வராமல் இருக்கலாம். நாம் ஞானி அல்ல. ஆனால் நாம் செய்கின்ற காரியங்களிடையே அவனை நினைக்க வழி உண்டு. எந்தக் காரியம் செய்தாலும் இறைவனை நினைந்து தொடங்கும் வழக்கத்தை நம்மவர் வைத்திருக்கிறார்கள். இடை யீடில்லாமல் நல்ல காரியங்களைச் செய்கிறவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். - வெள்ளைக்காரர்கள் அதிக காலம் உயிரோடு வாழ்கிறார்கள். காரணம் என்ன? அவர்களுக்கு நம்மைப்போலத் தெய்வ பக்தி இல்லையே! சம்பளத்திற்குச் செய்கின்ற வேலை அல்லாமல் ஒவ்வொருவரும் ஒருதொழிலைப் பொழுதுபோக்காக (Hobby)ச் செய்கிறார்கள். சர்ச்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். வாரக் கடைசியில் அவர் மீன் பிடிக்கப் போய்விடுவார். சிலர் புத்தகம் எழுதுவார்கள். சிலர் தோட்ட வேலை செய்வார்கள். சிலர் தேனி. கோழி முதலியவற்றை வளர்ப்பார்கள். தாவரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வோரும் உண்டு. சம்பளம் வாங்குகிற உத்தியோகம் அல்லாமல், அந்த வேலை இல்லாத மற்றக் காலங்களிலும் உடம்பு வாழ்வதற்கு, உள்ளம் சோர்வு அடையாமல் வாழ்வதற்கு, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு "ஹாபி'யை வைத்துக் கொண் டிருக்கிறார்கள். எத்தனை காலம் வாழ்ந்தாலும் ஏதாவது வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள். 241