பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் பெருமானை நினைந்து நீ உருகி அழைத்தால் அவன் உன்னை ஏற்றுக் கொள்வான். அதற்காகவே அவன் கோலக் குறத்தி வள்ளி யுடனேயே வருவான்' என்னும் கருத்துப் புலப்பட அருண கிரியார் இதை உபதேசிக்கிறார். உபதேசம் அவன் குருநாதன், உபதேசம் செய்கின்றவன். பல இடங் களிலே அருணகிரியார் தமக்கு உபதேசம் செய்தவன் முருகன் என்பதைச் சொல்லியிருக்கிறார். 'தேனென்று பாகென் றுவமிக் கொணாமொழித் தெய்வவள்ளி கோன்அன்று எனக்கு உபதேசித்து ஒன்று உண்டு” என்று முன்பே சொல்லியிருக்கிறார். அந்தக் குருநாதன் வருவான். அவன் ஒரு சீலத்தைச் சொன்னவன். குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார் சிவயோகிகளே. அவன் சொன்ன சீலம் அல்லது ஒழுக்கத்தை மெள்ளத் தெளிந்து அறிபவர் சிவயோகிகளாம். 'நமக்கு வள்ளி நாயகன் ஒன்றும் உபதேசம் செய்யவில்லையே! அருணகிரிநாதர் அல்லவா உபதேசம் செய்கிறார்?' என்று நாம் நினைக்கலாம். கங்கை நீர் பல பல கால்வாய்களின் வழியாக வந்தாலும் அது கங்கை நீரே தவிர வேறு நீர் ஆகாது. கங்கைத் தண்ணீரை ஒரு சின்னச் செம்பில் மொண்டு கொண்டு வந்து வைக்கிறோம். எத்தனை காலம் ஆனாலும் அது கங்கையாகவே நம் வீடுகளில் இருக்கின்றது. உபதேசமும் அத்தகையதே. பரம்பரை பரம்பரையாக அது வந்து கொண்டிருக்கிறது. காலத்தினால் இடையறாமல் ஞான குரு பரம்பரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. கங்கையில் இருக்கிற நீரும் நம் வீட்டில் இருக்கிற நீரும் ஒன்றேயாவது போல முருகன் எம்பெருமானுக்கு உபதேசம் செய்ய, அவர் முனி புங்கவர்களுக்கு உபதேசம் செய்ய, அவர்கள் வழிவழியாக மக்களுக்கு உபதேசம் செய்ய அந்த உபதேச மொழி வந்து க.சொ.11-17 247