பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை யாக்கிப் பாடியவை (5, 6); மற்ற மூன்றும் படர்க்கையில் அமைந்தவை. முருகனுடைய வீரத் திருவிளையாடல்களை இரண்டு பாடல்களில் காணலாம் (5, 6). அவனுடைய வேலின் பெருமையை நான்கு பாடல்கள் சொல்கின்றன (2, 4, 5, 6). அவனுடைய மயிலை இரண்டு பாடல்களும் (1, 4), திருவடியை மூன்று பாடல்களும் (2, 4, 5) நினைப்பூட்டுகின்றன. அவன் திருவடியை, செய்ய தாள் என்றும், வெட்சித் தண்டைக்கால் என்றும், புண்டரீகத்தினும் செக்கச் சிவந்த கழல் என்றும் போற்றுகிறார். தேனாம்பேட்டை பூரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை தோறும் இந்தச் சொற்பொழிவுகள் நடைபெறு கின்றன. பல அன்பர்கள் ஆர்வத்துடன் கேட்பதால் சிந்தித்துச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது. பேசுவதைச் சுருக்கெழுத்தால் எழுதி உருவாக்கும் பொறுப்பை அன்பர் ரீ அனந்தன் ஏற்றுக் கொண்டிருப்பதால், கூடிய வரையில் திருத்தமாகப் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்தப் பாதுகாப்புக்களுக்கு நடுவே, இது புத்தக உருவாகிறது’ என்ற எண்ணமும் உள்ளத்தில் இருந்து எச்சரிக்கை செய்கிறது. இந்தக் காரணங்களால் சொன்னதையே சொல்லாமல் இருக்க முயன்று பார்க்கிறேன். ஆயினும் சில இடங்களில் முன்பு விரிவாகச் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்லும் அவசியம் நேர்ந்து விடுகிறது. சொற்பொழிவு வாரந்தோறும் நடைபெற்றாலும் அன்பர் அனந்தன் தட்டெழுத்தில் வடித்துத் தந்தவற்றைப் பார்ப்பதில் சோம்பல் இடையே குறுக்கிடுகிறது. அதனால் புத்தகங்கள் சற்றே எருமை நடை போடுகின்றன. பேசுவது காற்றோடு போகாமல் உருவாவதற்கு இப்படி ஓர் அன்பரை முருகன் சுட்டுவித்தானே என்று எண்ணி அவனருளை வியக்கிறேன். அவருக்கும், இந்த நூல் வரிசையை அச்சேற்றும் 257