பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் 1 யமனுடைய வாதனையினின்றும் நீங்குவதற்குக் காலத்தை மாய்த்துக் காலத்தினால் மாய்க்கப்படாமல் இருப்பதற்கு, இறை வன் திருவருளால் பெறுவதற்குரிய உபதேச சீலம் இன்னதென் பதை, 'நீலச் சிகண்டியில் ஏறும்பிரான்,' என்னும் பாட்டினால் தெரிந்து கொண்டோம். அடுத்த பாட்டில் அருணகிரிநாதர் மற்றோர் உபாயம் சொல்கிறார். பல வகை உபாயம் கருணை நிரம்பியவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டு மானால் நான்கைந்து வழிகளைக் காட்டுவார்கள். ஏதேனும் ஒரு வழியை மாத்திரம் காட்டினால் அந்த வழியிலே செல்லும் திண்மையும் தகுதியும் இல்லாதவர்களுக்கு அதனால் பயன் உண்டாகாது. அதனால் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று பயன்படட்டும் என்ற கருணையோடு பலவகை வழியைப் பெரி யோர்கள் காட்டுவார்கள். மிகக் குறைந்த செல்வம் உடையவன் ஒருவனை அணுகி னால் அவன் தன்னிடம் பண்டம் ஒன்றும் இல்லாமையினால் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுப்பான். அப்படி இல்லாமல் வளவாழ்வு பெற்று, எல்லாப் பொருளும் தன் மாளிகையில் குவித்து வைத்திருக்கும் செல்வனை அணுகினால் அவன் வேண்டுவனவற்றையெல்லாம் பண்டமாகக் கொடுப்பான்; வகை வகையான பண்டங்களைக் கொடுப்பான். பொருள் இருந்தாலும் மனம் இல்லாவிட்டால் கொடுக்க இயலாது. மனம் இருந்தாலும் பொருள் இல்லாவிட்டால் அப் போதும் கொடுக்க இயலாது. ஆகவே இரண்டும் உடைய மக்களின் வழியாகத்தான் அவர்களைச் சார்ந்தவர்களுக்குப் பலவகைப் பண்டங்களும் பணமும் கிடைக்கின்றன.