பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் ஒழுக எனக்குத் திறமை இல்லை. எனக்கு ஒன்றும் வழி இல்லையா?” என்று கேட்டால் அதற்கு விடைபோல இருக்கும் பாட்டைச் சொல்கிறார். ஒலையும் தூதரும் கண்டுதிண் டாடல் ஒழித்தெனக்குக் காலையும் மாலையும் முன்னிற்கு மேகந்த வேள்மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்தசெச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே. இந்தப் பாட்டின் பொருளைக் கேள்வியாகவும் விடை யாகவும் கற்பனை செய்து பார்க்கலாம். காட்சியும் பதிவும் 'கோயிலுக்குப் போய் இருக்கிறாயா? ஆண்டவனுக்கு எத்தனையோ விதமான அலங்காரங்களைப் பண்ணுகிறார்களே! அவற்றையெல்லாம் பார்த்திருக்கிறாயா?” என்று ஒரு வினாவைக் கேட்டார் அருணகிரிநாதர். - 'போயிருக்கிறேன் சுவாமி. கந்த சஷ்டி அன்றுகூடக் கோயி லுக்குப் போய்ப் பார்த்தேன்' என்று அன்பன் பதில் சொன்னான். "பார்த்துவிட்டு வந்தாயே; என்ன பயனைக் கண்டாய்?" 'பார்த்தேன். அலங்காரம் அழகாய் இருந்தது. எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். நானும் போட்டுக் கொண்டு கீழே விழுந்து வணங்கிவிட்டு வந்தேன்." 'கண் பெற்ற பயனாகக் கண்டேன் என்றாயே; அது நல்லது. ஆனால் கண்ணுக்கு அப்பால் நோக்கும் நோக்கம் ஒன்று இருக் கிறது. அறிவுடைய மனிதனாக நீ இருப்பதனால் கண்ணாலே பார்த்து வந்துவிட்டேன் எனச் சொல்வதில் பயன் இல்லை.” 'பின்னே என்ன செய்ய வேண்டும்?" 'கண்ணாலே பார்த்ததைக் கருத்திலே பதித்துக் கொள்ள வேண்டும்.' - - 261