பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நிற்பதே இல்லை. ஒரே கணத்திற்குள் எத்தனையோ கோடி காதம் சென்று விடுகிறது மனம். சென்று சென்று சுழன்று கொண்டே இருக்கிறது. மனமும் அநுபவமும் முன்னலே அநுபவித்த ஒன்றை நினைப்பதற்குத்தான் மனத் துக்கு ஆற்றில் உண்டு. ஐந்து பொறிகளென்னும் வாசல் வழியாக நமக்குப் பல அநுபவங்கள் வருகின்றன. கண்டு, கேட்டு, கண்டு, i. உயிர்த்து, உற்று அறியும் ஐம்பொறிகளால் அநுபவிக்கிறோம். அந்த அநுபவத்தின் வாசனை மனத்தில் ஏறுகிறது. மல்லிகை மலரை எடுத்து மோந்து பார்க்கிறோம். பிறகு ஒரு சமயம், அந்தப் பொருள் கண் முன்பு இல்லாவிட்டாலும் ஒரு மல்லிகை மலரை எடுத்து மோப்பது போன்ற அநுபவத்தை நினைப்பால் மனம் பெறுகிறது. நல்ல ஜிலேபியைச் சாப்பிடுகிறோம். சாப்பிடு வது வாய்தான் என்றாலும், சாப்பிட்ட பிற்பாடு அதை மனம் நினைக்கிறது. வாசனை நுகர்கின்ற நினைவு வேறு; சங்கீதம் கேட்கின்ற நினைவு வேறு. நினைப்பு ஒன்றாக இருந்தாலும் அநுபவ வேறுபாட்டால் ஐந்து விதமான நினைப்புக்கள் அமை கின்றன. ஜிலேபியை வாயில் போட்டுக் கொண்டு சுவைப்பது சுவை; அதைப் பற்றி நினைப்பது நினைவு; அதுவே வாசனை. குழந்தையை அணைக்கிறமாதிரி நினைக்கிறோம். அழகான உருவத்தைப் பார்க்கிற மாதிரி நினைக்கிறோம். இப்படி ஐந்து பொறிகளின் அநுபவமான வாசனைகளும் மனத்தில் படிந்திருக்கும். மனம் ஐந்து பொறிகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை நினைக்க முடியாது. ஐந்து பொறிகளுக்கும் உட்பட்ட அநுபவத்தையே நாம் நினைக்கிறோம். முன்பின் பார்த்திராத மனிதன் ஒருவனைச் சொப்பனத்தில் பார்க்கிறோமே, அது எப்படி? பார்க்காத மனிதனைச் சொப்பனத்தில் பார்த்தேன் என்று சொன்னாலும், மனிதன் என்ற பொருளை நாம் பார்த்துப் பார்த்துப் பழகியிருக் கிறோம் அல்லவா? மனத்தில் இத்தகைய அநுபவம் படலம் படலமாகச் செறிந்திருக்கிறது. பதிவும் வாசனையும் அமெரிக்க நாட்டில் குற்றவாளியையும், நோயாளியைப் போலவே கருதி, மருத்துவத்தின் மூலம் அவனது குணத்தை 16