பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வழிபட்டால் போதும். அதிலிருந்து இன்பம் உண்டாகும். நம் நாட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது; உனக்குத் தெரியுமா, நாள்தோறும் தேவாரத்திலுள்ள பதிகத்தைப் பாராயணம் பண்ணும் எண்ணம் உடையவர்கள் நேரம் இல்லாவிட்டால் அப்பதிகத்தின் முதல் பாட்டையும் கடைசிப் பாட்டையும் சொல்வது வழக்கம். அந்த இரண்டையும் பாடினாலேயே நடுவில் இருக்கிற அத்தனையையும் சொன்னது போலாகும் என்று சொல்வார்கள். அதைப் போலவே இருபத்து நான்கு மணி நேரத்தில் மாலை என்பது ஒர் எல்லை; காலை என்பது ஒர் எல்லை. பகலில் எங்கும் ஒளி பரவி நிற்கும். இரவில் எங்கும் இருள் கவிந்திருக்கும். ஒளி இறைவனுக்கு அடையாளம். இருள் கூற்றுவனுக்கு அடையாளம். வாழ்க்கையில் ஒளி நிரம்பிய பகல் பிறப்பைப் போலவும், இரவு இறப்பைப் போலவும் உள்ளன. 'உறங்குவது போலவும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறார் வள்ளுவர். இரவில் உடம்பு தொழில்படாமல் அடங்கி யிருக்கும். இரவு நேரம் போனபிறகு எல்லா உறுப்புக்களும் தொழில் படுகின்றன. விடியும்போது பிறக்கிறான்; உறுப்புக்கள் தொழில்பட ஆரம்பிக்கின்றன. இரவில் மரிக்கிறான்; உறுப்புக்கள் தொழில்படாமல் அடங்கிவிடுகின்றன. பிறக்கின்ற, இறக்கின்ற காலம் இரண்டுக்கும் எல்லையாக உள்ள இரண்டு போதுகள் காலையும் மாலையும். இந்த இரண்டு நேரங்களில் இறைவனை நினைந்து வழிபட்டு, அவன் திருவுருவத்தை மனத் திரையில் ஒவியமாகத் தீட்டிக் கொண்டால் இப்போதைக்குப் போதும்' என்கிறார் அருணகிரியார். காலையும் மாலையும் முன் நிற்குமே அந்தணர்கள் காலை, மாலை, மத்தியான்னம் ஆகிய மூன்று போதும் சந்தியாவந்தனம் செய்வார்கள். காலையும், மாலையும் தவறாமல் செய்வது மிக்க விசேஷம். பெரிய திருக்கோயில்களில் ஆறு காலம் பூசை நடைபெறும். சிறிய கோயில்களில் காலையும் மாலையுமாகிய இரண்டு சந்திகளில் பூசை நிகழும். சந்திகளில் சிறந்தவை காலையும் மாலையும். இந்த இரண்டு பொழுதும் 268