பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பார்த்தாயா? தோளில் அணிந்துள்ள மாலையைப் பார்த்தாயா? கையில் தாங்கியுள்ள சேவல் கொடியைப் பார்த்தாயா? அவனுக்கு அருகில் நிற்கும் தோகையுடைய மயிலைப் பார்த்தாயா? வெற்றி மாலையைப் பார்த்தாயா?" என்று அருணகிரியார் கேட்டுக்கொண்டே போகிறார். "காலையும், மாலையும் இவற்றையெல்லாம் பார்த் தால், கருத்தோடு பார்த்து மனத்தில் பதிவை ஏற்படுத்திக் கொண்டால் நீ இறக்கும் மாலையிலும், பிறக்கும் காலையிலும் இவை முன்நிற்கும்' என்கிறார். கந்தவேள் வேள் என்ற பெயருடையோர் இருவர். ஒருவன் செவ்வேள்; மற்றொருவன் கருவேள். முருகன் செவ்வேள். பொதுவாக வேள் என்று சொல்லும்போது அது முருகனையே குறிக்கும். இங்கே சொன்ன வேள் கந்த வேள். - கந்தவேள் மருங்கில் சேலையும் மருங்கு என்பது இடை. அவன் இடுப்பில் ஆடை கட்டியிருக்கிறான். சேலை என்பது ஆடைக்குரிய பொதுப் பெயராக இருந்தது மாறி இப்போது பெண்டிர் கட்டும் ஆடைக்கு வழங்குகிறது. கட்டிய சீராவும் எம்பெருமான் வீரன் அல்லவா? தன் இடையில் உடைவாள் கட்டியிருக்கிறான். சீரா என்பது உடைவாள். இடுப்பிலே சிவந்த ஆடை கட்டியிருக்கிறான். மேலே உடைவாள் தொங்குகிறது. பக்தர்களின் பகைவர்களை அழிக்கும் வாள் அது. பக்தர்களுக்கு ஞான ஒளி கொடுப்பது அது. வெட்சி மாலை கையில் சிவந்த செச்சை மாலையும் செச்சை என்பது வெட்சிப் பூவுக்குப் பெயர். செக்கச் செவேல் என்று இருக்கும். சிவந்த வெட்சிப் பூவால் ஆனமாலை, செச்சை மாலை. அது முருகனுக்கு உரியது. வெட்சி என்னும் பூவைப்பற்றிச் சற்று இங்கே சிந்திப்போம். தமிழ் இலக்கணத்தை இரு பிரிவாகப் பிரித்தார்கள். அகம், புறம் என்பவை அவை. காதலோடு தொடர்புடையது அகம். 274