பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் நெருங்கி வந்ததைக் கண்டார்கள். அவன் தொட்டுத் தூக்கிய தையும் கண்டார்கள். கண்மூடிக் கண் திறப்பதற்குள் என்ன சத்தம் வில் ஒடிந்துபோய் விழுந்த சத்தந்தான் காதில் விழுந்தது. “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்" என்கிறார் கம்பர். அதைப்போல முருகன் இடுப்பில் உடை வாளையும் கையில் வெட்சி மாலையையும் கண்டோம். கொடி கட்டி மயிலின்மேல் ஏறியதைப் பார்த்தோம். இது என்ன? வெற்றி மாலையை அல்லவா காண்கிறோம்? ஆம்; அவன் வெற்றி பெற்றுவிட்டான். உடைவாளுடன் வெட்சியை அணிந்து கையில் கொடியை உயர்த்திக் கொண்டு மயிலுடன் புறப்பட்டுவிட்டான் என்றால் அவன் போருக்குத் தான் எழுந்தான் என்று எண்ணுவதில் தவறு இல்லை. ஆனால் போர் நடந்தது நமக்குத் தெரியாது. பகைவன் அழிந்துவிட்டான். முருகப் பெருமான் வெற்றி வீரனாகிவிட்டான். இதற்கு அடை usro ILD 6TGöT@T2 - வாகையுமே அவன் வாகை மாலையை அணிந்து கொண்டிருக்கிறான். மற்றவர்களுக்குத் தன்னுடைய வீரத்தை, வெற்றியை விளம்பரப் படுத்திக் கொள்ளவா அவன் வாகை மாலை சூட்டிக் கொண்டிருக் கிறான்? 'நீ பயப்படாதே. நான் இதோ இருக்கிறேன். எப்படிப் பட்ட பகைவர்களானாலும் என்னிடம் வந்தால் நான் அழித்து விடுவேன். வெற்றி எப்பொழுதும் எனக்குத்தான்' என்பதை வாகை மூலமாக ஆருயிர்களுக்கு உணர்த்திப் பயத்தைப் போக்கு கிறான். 'என்னிடத்தில் உனக்குத் தொடர்பு இருந்தால் உனக்கு வெற்றி அளிக்க நான் வருவேன்' என்பதற்கு அடையாளமாக வாகை மாலையை சூடிக்கொண்டிருக்கிறான். சேவல் பதாகை பிடித்திருக்கிறான். முருகன் இடையில் கட்டிய சேலையையும், சீராவையும், கையில் அணிந்துள்ள செச்சை மாலையையும், சேவல் பதாகை யையும், தோகையையும், வாகையையும் கண்டு இன்பப் பூரிப்பு அடைகிறார்கள் பக்தர்கள். 277