பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் ஒருவனைப் பார்த்து, 'நீ அப்படிச் செய். வெற்றி பெறு வாய் என்று சொன்னால் ஒருகால் அவன் வெற்றி அளிக்கும் என்பது என்ன நிச்சயம் என்று எண்ணிச் செய்யாமல் விட்டாலும் விட்டுவிடுவான். 'நான் அப்படித்தான் செய்தேன், வெற்றி அடைந்தேன்' என்று வெளிப்படையாகச் சொல்லி, "நீயும் அப்படிச் செய்” என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கிறார். 'எம்பெருமானின் திருவுருவத்தைத் தரிசித்துப் பின்பு காலையும் மாலையும் ஆன சந்தியா வேளையில் அவற்றைத் தியானம் செய்தால் அவ்விரு வேளைகளிலும் அவனது திருவுருவம் உனக்கு முன் தோன்றும். ஒருநாள் காலையும் மாலையும் தோன்றுவது மாத்திரம் அல்ல. இறக்கும்போதும் அத்திருவுருவம் வந்து முன் நிற்கும். அதனால் என்ன பயன் தெரியுமா? ஒலை யுடன் எம தூதன் வரமாட்டான். இது என் அநுபவம். எனக்கு அத்திருக்கோலம் முன் நிற்கிறது' என்பது அவர் உபதேசம். அதுபவத்தால் உணரல் மடையில் தண்ணீர் பாய்கிறது. தண்ணிர் வேகமாய்ப் போய் வயலில் பாய்வது தெரிகிறது. நூற்றைம்பது கன அடி தண்ணீர் விட்டான் என்று அளவு கொடுக்கலாம். பயிர் நன்றாக விளைந்து வருவதையும் பார்க்கிறோம். தண்ணீர் பயிருக்குள் எப்படிப் பாய்ந்தது என்றால் என்ன சொல்வது? தண்ணிர் பாயும்போது கண்ணுக்குத் தெரிந்தது. பயிர் விளைந்து தழைத்து நிற்கும் போதும் கண்ணுக்குத் தெரிகிறது. "இடையில் எப்படித் தண்ணீர் பாய்ந்தது? எப்படிப் பயிர் அவற்றை எடுத்துக் கொண்டது? தானியம் எப்படி விளைந்தது?" என்றால் என்ன பதில் சொல்வது? நடுவில் நடக்கின்ற காரியங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதே போல எம்பெருமானின் அழகான திருவுருவ தரிசனம் கண்டுகொண்டால் அதன் பயனாகத் தீங்குகள் போய்விடும். மனத்திலுள்ள சோர்வுகள் போய்விடும். அச்சம் போய்விடும். இருள் அகன்றுவிடும். ஞான ஒளி பிறக்கும். காலனுக்கு அங்கே வேலை இல்லை. வரமாட்டான். இறைவன் திருவருள் இன்பம் கிடைக்கும். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று விளக்க இயலாது. அது அநுபவித்து உணர வேண்டியது. ★ க.சொ.ா-19 - 279