பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கநதரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஒரு வயிற்றில் பிறந்து ஒரே ஆசிரியரிடம் பயிலும் இரண்டு மாணவர்களின் அறிவு வெவ்வேறு விதமான சக்தி உடையனவாக இருப்பதைப் பார்க்கிறோம். இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர் களின் அறிவேனும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? இல்லை. இதற்குக் காரணம் என்ன? இரண்டு பேரும் ஒரே வயிற்றில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தாலும், முந்திய பிறப்பில் அவர்களின் உள்ளங்களில் அமைந்த வாசனையினால் அறிவு முதலியன மாறுபாடு அடைகின்றன. மனத்தில் முன்பு ஏற்பட் டிருக்கும் அநுபவங்களின் வடுக்கள் எல்லாம் வாசனையாக இருப்பதனால்தான் வெவ்வேறு வகையில் மனமும் செயல்களும் அமைகின்றன. இந்த மனம் ஆகிய பொம்மையைப் பொறி களாகிய ஐந்துபேர்கள் பின்னால் இருந்து வெவ்வேறு வகையில் ஆட்டுகிறார்கள். பாசம் என்ற ஒன்றோடு நெஞ்சைச் சேர்த்துக் கட்டி வைத்து ஆட்டுகிறார்கள். வாழ்க்கையே ஐந்துபேர் மனத்தைப் பாசத்தால் ஆட்டும் கூத்தாக அமைகிறது. ஞானிகளும் பொறிகளும் உடம்பைப் பெற்ற யாவருக்கும் ஐந்து பொறிகள் உண்டு. பொறிகளை இந்திரியங்கள் என்பர். மெய்ஞ்ஞானிகளுக்கும் அவை உண்டு. அவர்களும் கண்ணால்தான் பார்க்கிறார்கள். காதால் தான் கேட்கிறார்கள். காலால்தான் நடக்கிறார்கள். வாயால்தான் சாப்பிடுகிறார்கள். ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலிய பெரிய ஞானிகளும் அப்படித்தான் இருந்தார்கள். ஞானம் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் காது செவிடாகப் போகவில்லை. கண் குருடாகப் போகவில்லை. உடம்பு கட்டை யாகக் கிடக்கவில்லை. அப்படியாயின் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேற்றுமை? அவர்களுக்கும் நம்மைப் போல ஐந்து பொறிகளும் வேலை செய்கின்றன. ஆனால் மனம் அமைதியாக இருக்கிறது. பின்னே இருக்கிற மனிதன் எப்படி ஆட்டினாலும், வெளியிலுள்ள பொம்மை கள் ஆடவில்லை. ஏன்? இருசாராரையும் இணைத் திருக்கும் கயிறு அறந்துபோய்விட்டது. ஐந்து பொறிகளும் மனத்திற்கும் இடையே உள்ள கயிறாகிய பாசம் அறுபட்டுப் போய்விட்டது; அதனால் மனம் ஆடுவது இல்லை. பார்ப்பதற்கு நாமும், ஞானி