பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கொள்ள முடியும். சாப்பிட வேண்டிய பொருளின் தரத்தைத் தெரிந்துகொள்ளாமல் சாப்பிடவும் கூடாது. சாப்பாட்டை உண்ணாமல் தெரிந்துகொள்ள முடியாது. தெரிந்து கொள்ளாமல் உண்ணக் கூடாது என்பது நமக்குப் புரிகிறது. அதேபோல இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள் ளாமல் அவனைத் தெரிந்துகொள்ள முடியாது, தெரிந்து கொள்ளாமல் அவன் திருவடியைப் பற்றவும் முடியாது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றலாம். சாப்பிடப் போகிறவர்கள் என்ன செய்கிறார்கள் எந்த இடத்தில் சாப்பாடு கிடைக்குமோ அந்த இடத்தில் சாப்பிட்டு வருகிறவர்களிடம், "சாப்பாடு எப்படி இருக்கிறது?" என்று கேட்கிறார்கள். அவர்கள், "நன்றாக இருக்கிறது' என்றால் அவர்கள் வார்த்தையை நம்பி உள்ளே போய்ச் சுவைத்துச் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொள்ளுகிறார்கள். "அவர்கள் சொல்வதை எப்படி நம்புவது?" என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருந் தால் சாப்பிடவே முடியாது. சந்தேகம் உள்ளவர்கள் வீட்டில்தான் எப்படிச் சாப்பிடுவார்கள்? தாயார் சமைத்து வைத்திருக்கிற பண்டத்தில் நஞ்சு கலந்திருந்தால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தால் சாப்பிடாமல் இருக்க வேண்டியதுதான். எதற்கும் சந்தேகப்பட்டுக்கொண்டு, நம்பிக்கை என்பது அறவே இல்லாமல் இருப்பவர்கள் உலகில் ஒரு கணம்கூட வாழ முடி யாது. நம்பிக்கையில்தான் உலகம் இயங்குகிறது. எல்லாவற்றை யும் தெளிவாக நாமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பது இய லாது. நமக்கு உணவுப் பண்டம் கொடுப்பவர்கள் நல்லவர்களா, நம்முடைய நன்மையையே கருதுபவர்களா என்று முதலில் ஆராய்ச்சி பண்ணி முடிவு செய்து கொள்ளலாம். அவர்கள் நல்ல வர்கள், நம்பால் அன்பு உள்ளவர்கள் என்று தெரிந்து கொண்டு விட்டால் அவர்கள் கொடுப்பதை ஐயமின்றிப் பெற்றுக்கொள்ளத் தான் வேண்டும். நம்பிக்கை இறைவனைப்பற்றி நாமே தெரிந்து கொண்டுதான் அவனது அருளைப் பெற முயற்சி செய்யவேண்டும் என்பது முடியாத காரியம்.அவன் அருளைப் பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் 282