பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இருக்கின்ற இது உன் தந்தையா?” என்று கேட்டார். 'இல்லை. இது என் தந்தை அல்ல. ஆனால் தந்தையை நினைக்கச் செய்கிற அடையாளம்' என்றார். "இதைப் போலத்தான் எங்கள் நாட்டுக் கோயில்களில் இருக்கிற விக்கிரகங்கள் இறைவனை நினைப்பூட்டும் அடை யாளமாகத் திகழ்கின்றன” எனச் சொன்னாராம். அப்புறந்தான் அந்தக் கேள்வியைக் கேட்டவருக்கு உண்மை விளங்கிற்றாம். இணைப்புப் பாலம் நாம் இன்னும் அக்கரைக்குப் போகவில்லை. சேற்றுக் குள்ளேயே நின்றுகொண்டிருக்கிறோம். பிரபஞ்சம் என்னும் சேற்றுக்குள் இருக்கின்ற நமக்கும், பிரபஞ்சச் சேற்றைக் கடந்து நிற்கிற ஆண்டவனுக்கும் ஓர் இணைப்புப் பாலம் இருந்தால் நாம் அவனைத் தெரிந்துகொள்ள முடியும். பாலம் அங்கேயிருந்து வராது; இங்கிருந்து போட வேண்டும். இங்கிருந்து அங்கே போன ஒருவர் திரும்பவும் அங்கிருந்து இங்கே வந்து, பாலம் கட்டி நம்மை அங்கே அழைத்துப் போகவேண்டும். ஆண்டவனது திருவருள் இன்பத்தைத் தாம் பெற்று, அந்த இன்ப நுகர்ச்சியின் மிகுதியாலே, நாமும் உய்வு பெறுவதற்கு ஏற்றபடி அவர் பாலம் போட வேண்டும். அப்படிப்போட்டால்தான் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டாகும். அத்தகையவர்களே குருமூர்த்திகள். அருணகிரிநாதர் அந்தக் குருமூர்த்திகளுள் ஒருவர். அகண்டமாய் இருக்கிற பொருளை நமக்குக் கண்டமாகக் காட்டுகிறார். அகண்டம் என்பது எல்லை இல்லாத ஒன்று. கண்டம் என்பது எல்லையை உடையது. 'எல்லை இல்லாத அகண்டமாய் இருக்கும் ஒன்றை, எல்லைகளை உடைய கண்டமாக எப்படிக் காட்ட முடியும்?" என யாராவது கேள்வி கேட்கலாம். சோலையின் ஒவியம் ஒரு மைல் நீளம், ஒரு மைல் அகலம் உடைய ஒரு பூஞ் சோலை. அங்கே அழகான வண்ணப்பூக்களைக் கொண்ட செடி கள் உள்ளன. கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய விருந்தாக இருக்கும் அந்தச் சோலையைப் பலரும் கண்டு மகிழ்ச்சி அடைய 284