பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நின்றபடியே அந்தச் சன்னல் வழியாக ஊடுருவிப் பார்த்தான் சிறைப்பட்டிருந்தவன். கண் பார்வை செல்லக்கூடிய மட்டும் பார்த்தான். ஆனால் அவனால் நெடுந்துரம் பார்க்க முடியவில்லை. சிறிய அறையில் அடைபட்டிருந்தவன் அல்லவா? இருந்தாலும், 'அடடா எவ்வளவு அழகாக இருக்கிறது. மரங்கள் தெரிகின் றனவே! நீல வானம் தெரிகின்றதே!' என்று வியப்படைந்தான். அகண்டமாக இருக்கும் பொருளை அவன் கண்டமாகக் கண்டு ஆனந்தப்பட்டான். இது வரையிலும் சிற்றறைக்குள் அடைப் பட்டுக் கிடந்த உலகம் இப்பொழுது சன்னலின் அளவுக்கு அவனுக்கு விரிந்தது. சில நாட்களுக்குப் பின் அவனை அறையை விட்டுத் திறந்துவிட்டார்கள். ஆனால் சிறையை விட்டுப் போகவில்லை. அவன் இப்போது சன்னலுக்கு அருகில் நெருங்கி நின்றுகொண்டு பார்த்தான். இப்பொழுது, பரந்து விரிந்து கிடக்கின்ற உலகத் திற்கும் அவனுக்கும் நடுவில் எல்லைக் கோடாக இருந்தது சிறைக்கூடத்தின் சுவர். சன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு பார்க்கின்ற அவனுக்கு உலகம் முழுவதும் தெரிந்ததா? எல்லாப் பட்சிகளும் கண்ணில் பட்டனவா? மரங்கள் அத்தனையும் கண்டு விட்டானா? இல்லை. சில மரங்களைக் கண்டான். சில பட்சிகளைக் கண்டான். பார்த்த பொருள்கள் எல்லாம் ஓரளவிலே அடங்கியவை. t விடுதலைக்குப் பின் அவன் விடுதலை அடைந்து வெளியே வந்தான். எல்லை யற்றுப் பரந்து கிடந்தது உலகம். நெடுந்துாரம் வரையில் பார்த் தான். பூமியை வான் தொடுவதுபோலத் தோன்றிய தூரம் வரையில் பார்த்தான். தான் முன்பு சன்னல் வழியாகக் கண்ட பொருள்கள் எல்லாம் தோன்றின. அவற்றுக்கு மேற்பட்ட பொருள் களும் தோன்றின. அங்கே சிறைக்கூடத்துச் சன்னல் அளவுக்குப் பார்வை விரிந்தது. இங்கே அவன் பார்வையை தடுக்கின்ற தடை கள் எதுவும் இல்லை. இருந்தாலும் அவன் கண் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிய பார்வையை உடையது. ஆதலாலே தொடுவானம் வரையில் தெரிந்தது. உண்மையில் தொடுவானம் என்று ஒன்று இருக்கிறதா? முட்டை வடிவம் போல உலகம் 286