பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் இருப்பதனால் அப்படித் தோன்றுகிறது என்று பூகோளகக்காரர் கள் சொல்வார்கள். இவன் அந்தத் தொடுவானம் வரையிலும் போய்ப் பார்த்துவிடுவது என்று போய்க்கொண்டே இருந்தானா னால் இவனால் அந்த இடத்திற்குப் போகத்தான் முடியுமா? உண்மையில் நம் கண் பார்வைக்கு வானமும் பூமியும் முட்டுவது போல இருக்கிறது. காரணம் கண்ணின் பார்வை எல்லைக்குட் பட்டது. அந்த எல்லைக்கோடு வரையிலும் ஒருவன் படமாக எழுதிக் கொள்ளலாம். அந்தப் படம் எல்லை இல்லாத அகண்ட உருவத்தைக் கண்டமாகக் காட்டும். இதைப் போலவேதான் இறைவன் அகண்டமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக் குள் அடங்கிய வாழ்க்கைைையப் பெற்ற மனிதர்கள் அவனைக் கண்டமாகக் காண்கிறார்கள். அவரவர்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி அந்தக் கண்டம் அமைகிறது. அனுபவத்தைப் பெறாத மக்களுக்கு எப்படித் தோற்று கிறான்? சிறைக்குள்ளே சிற்றறையில் அடைபட்டுக் கிடந்த குற்றவாளிக்கு உலகத்தைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. சிறைக்காவலன் சன்னலைத் திறந்துவிட்டபோது, சன்னல் அளவுக்கு உலகம் அவனுக்குத் தெரிந்தது. அதைப் போலவே பெரியவர்களுடைய உபதேசமாகிய சன்னல் கிடைத்தால் அதன் வழியே பார்க்கும்போது இறைவனைப் பற்றி ஒர் அளவுக்குத் தெரிந்துகொள்ளலாம். அகண்டமாக இருக்கின்ற உலகத்தின் ஒரு பகுதியே உள்ளேயும் இருக்கிறது என்பதை அவன் உணருகிறான். ஆனால் அவனுக்குப் புறம்பேயுள்ள அந்த அகண்டவெளி முழு வதையும் அவன் காணவில்லை. நல்லவனுடைய துணையினால் அவன் அறையை விட்டு வெளியே வரும்போது பரந்த வெளியைக் கண் பார்வை விரிகின்ற அளவு பார்க்கிறான். அவன் பார்வை அப்போதும் ஓர் எல்லைக்குள் அடங்கித்தான் இருக்கிறது. எல்லை என்பது என்ன? தனக்கு அப்பாலும் ஒன்று இருக் கிறது என உணர்த்துவது எல்லை. சிறைக்குள் இருப்பவனுக்குச் சுவர் எல்லையாக இருந்தது. சுவருக்கு அப்பாலே திறந்தவெளி பரந்து கிடக்கிறது என்பதை உணர்ந்தான். சுவருக்கு உள்ளேயும் அந்த வெளியின் கண்டம் இருக்கிறது என்பதை உணர்ந்தான். சிறைக்கு வெளியே வந்தபோது தன் கண் பார்வையின் எல்லை யளவும் வெளியும் காட்சிகளும் தெரிந்தன. அதற்கு அப்பாலும் 287