பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் என்கிறார். அதே மலை, அதே கடவுள் இன்றைக்கும் இருக் கின்றன. ஆனால் அவரைப் போல நம் மனம் உருகவில்லையே! அவ்வுருவத்திற்குள் இறைவனது இருப்பைக் கண்டால் அல்லவா நம் மனம் உருகும்? கனிந்து கனிந்து இளகும்! "மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்' என்கிறார் வள்ளுவர். இதற்குப் பரிமேலழகர் உரை எழுதப் புகுந்தபோது, 'அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ஏகினான் என இறந்த காலத்தால் கூறினார் என்று குறிப்பிட்டு, சேர்தல் என்பது இடைவிடாது நினைத்தல்' என்கிறார். நினைப்பதாவது மனத்தை இறைவனது திருவடியிலே நெருங்கி நிற்கச் செய்து தியானித்தல். நாம் ஆண்டவனுக்கு எத்தனை பக்கத்தில் போய் நின்றாலும், மனம் நெருங்கி நிற்காமல் இருக்கிறோம். ஒரே வீட்டில் அடுத்த அறையில் குடியிருக்கிறவன் யார் என்று நமக்குத் தெரியாதே! மனைவியும் கணவனும் ஒரே வீட்டில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் இரண்டு பேருடைய மனமும் நெருங்கியிருப்பதில்லை. நெருங்குவது போலச் சென்று, திரும்பவும் பிரிந்து விடுகிறோம். சிறைக்கூடத்தின் நடுவில் இருந்தவன் சன்னலுக்கு அருகில் நெருங்கிச் சென்று பார்த்தபோது எப்படி முன்னே தெரியாத பொருள்களை அதிகமாகப் பார்த்தானோ, அப்படியே இறைவனது உருவத்தை உள்ளத்தால் நெருங்கிப் பார்ப்பவர்களுக்கு முன்பு தெரிந்ததைவிட அதிகமாக அவனது அகண்டவுருவத்தின் பல கண்டங்கள் தெரிகின்றன. மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத பல புது உண்மைகள் விளங்குகின்றன. அறையை விட்டு வெளி வந்தவனுக்கு அகண்டமான உலகம் எப்படி அவன் கண்ணின் எல்லைக்கு எட்டிய வரையில் தெரிந்ததோ அதேபோலப் பிரபஞ்சச் சேற்றைவிட்டு வெளிவந்தவனுக்கு இறைவனது அகண்டமான உருவம் அவன் அகக்கண் எட்டிய மட்டும் தெரிகிறது. அகண்டமாக இருக்கிற பொருளைப் பார்த்தேன் என்று சொன்னால் என்ன பொருள்? அகண்டமாய் இருக்கிற பொருள் முழுவதையும் பார்க்கவில்லை. அவன் எதைப் பார்த்தானோ, எது அகண்ட சொரூபத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறதோ அது, அகண்ட சொரூத்தின் ஒரு பகுதி என்று நாம் தெரிந்துகொள்ள 289