பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் என்கிற எண்ணந்தான். அதன் பின் எண்ணம் விரிந்தது. ஒரு கார் வாங்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்குப் போதுமான பணம் இதோ இருக்கிறது என நினைத்தபோது பெண்ணுக்கு வெறும் எண்ணாகத் தோன்றி ஒன்று, பையனுக்கும் வெறும் ரூபா பைசாவாகத் தோன்றிய ஒன்று, எனக்கு எண்ணாகவும் தோன்றியது; ரூபா பைசா ஆகவும் தோன்றியத; என்னுடைய பணமாகவும் தோன்றியது; அதுவே என் இன்பத்திற்குப் பயன்படும் பொருளாகவும் தோன்றி எனக்கு மிக்க இன்பத்தை அளித்தது. ஆக நான்கு நிலைகள் இதில் வந்துவிட்டன. ஒன்றுக்கொன்று முரண்பட்டது அல்ல; ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்து நின்ற நிலை. அநுபவ வளர்ச்சி ஒருவன் கோயிலுக்குப் போக ஆரம்பித்தான். முதலில் கோயிலில் இருந்த சாதாரணக் கல் விக்கிரமாகத் தோற்றியது. பின்னர் அதுவே அவனுக்குக் கொஞ்சம் முகமாகத் தோற்றியது. பின்னர் மனம் நெருங்க நெருங்க ஆண்டவனது கொஞ்சும் முகம் ஒளி விஞ்சும் முகமாகத் தோற்றியது. கடைசியில் இது யாருக்கோ பயன்படப் போவது அன்று, நமக்கே பயன்படக் கூடியது என எண்ணி இன்பச் சிலிர்ப்பு எய்தினான். 'நாலாயிரத்து எண்ணுறு ரூபாய், எண்பது பைசா இது; இது என்னுடைய பணம்; எனக்குக் கார் வாங்கப் பயன்படப் போகிறது” என எண்ணுகிறவனுடைய நினைப்பு எப்படி வெறும் எண்ணிலிருந்து தோன்றுகிறதோ, அவ்வாறே முதலில் இறைவன் விக்கிரகத்தில் காணும் முகம் பின்பு தன் வாழ்க்கைக்குப் பயன்தரக்கூடிய இன்ப நலங்களைப் பெற்று உய்யும்படி அருளும் ஒளிவிஞ்சும் முகமாகத் தோன்றி அவனுடன் கொஞ்சுகிறது. வேல் விளங்கும் கை எல்லோருக்கும் இல்லாத அடையாளம் முருகப் பெரு மானிடம் ஒன்று இருக்கிறது. அவன் வெற்றிவேல் பெருமாள். எம்பெருமானின் திருக்கையில் வேல் இருப்பதால் அவன் பெருமை உயரவில்லை. அவனால் வேல் பெருமை அடைகிறது. எம்பெருமான் கையில் இல்லாமல் வேறு ஒருவருடைய கையில் அது இருந்தால் அதற்கு அவ்வளவு பெருமை உண்டா? 29 i