பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வணங்க வேண்டுமானால் அடியற்ற மரம்போலக் கீழே விழுந்து வணங்க வேண்டும். என்றைக்கோ ஒரு நாள் இந்த உடம்பைத் காலன் நிச்சயமாக வந்து வெட்டிச் சாய்க்கப் போகிறான். அதற்குள் நாமே இறைவனது திருவடியை ஒட்டிச் சாய்ந்து விட்டால் காலனுக்கு வேலை இல்லை. காப்பு அற்றவர்களைக் காலன் விட்டு வைப்பானா? 'இன்னும் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. கல்யாணமான பின்பு என்னை வெட்டித் தள்ளேன். என்று சொன்னால் விடுவானா? "எனக்குக் குழந்தை இல்லையே! ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை வெட்டக் கூடாதா?’ என்று கெஞ்சினால் விடுவானா? மாட்டான். ஆகவே, "எம்பெருமானே! எல்லாம் என் செயலால் நடக்கிறது என்று எண்ணி இறுமாந் திருந்தேன். எனக்கு ஒருவிதமான செயலும் இல்லை' எனச் செயலற்ற மரமாக அவன் திருவடிகளை ஒட்டிச் சாய்ந்து விழுந்து விட்டால், காலன் வெட்டிச் சாய்க்க வரமாட்டான். தலையாகிய உறுப்பைப் பெற்றிருப்பதன் பயன் எண் குணங் கள் நிரம்பிய இறைவனது திருவடியில் வணங்குவது ஆகும். இல்லாவிடின் ஒரு பயனும் இல்லாதது அத்தலை என்கிறார் வள்ளுவர். இறைவன் நமக்குக் கை கொடுத்த பயனாகக் கையால் கும்பிட்டு வணங்குகிறோம். தலை கொடுத்த பயனாகத் தலை யால் வணங்குகிறோம். உடம்பையும் உறுப்புக்களையும் பெற் றிருப்பதன் பயன் சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கு வதாகும். சாஷ்டாங்க நமஸ்காரம் என்பதற்குப் பொருள் என்ன? அஷ்ட அங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள். எட்டு உறுப்புக்கள் தரையில் படும்படியாக வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம். இரண்டு கை, இரண்டு முழங்கால், இருதோள், மார்பு, நெற்றி ஆகிய எட்டு உறுப்புக்களும் படிய வணங்க வேண்டும். இறைஞ்சுவதால் பயன் 'அப்படி வணங்குவதால் பயன் என்ன?' என்று சிலர் கேட்கலாம். பெரியவர்களை வணங்கும்போது உள்ளத்தே பணிவு ஏற்படுவது ஒரு பயன். அதோடு உடம்பும் வணங்கு கிறது. அந்தக் காலத்தில் கல்யாணம் நடந்தால் பெண்ணைப் பார்க்கப் பலர் வருவார்கள். பெண்ணைவிட வயசான ஒருவர் 294